search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏ ஆர் ரகுமான்"

    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’.
    • இந்த திரைப்படம் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது.

    மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.


    பொன்னியின் செல்வன்

    இப்படத்தில் நடித்த நடிகர்களுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.


    பொன்னியின் செல்வன்

    இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் 'பொன்னியின் செல்வன்' படத்தின் பாடல்கள் குறித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "என்னுடைய அனுபவத்தில் பெஸ்ட் மியூசிக் ஆல்பம், ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் மணிரத்னம் சாரின் பொன்னியின் செல்வன் என்பதில் சந்தேகமே இல்லை. மிகச் சிறிய இடத்தில் கூட கவனம் செலுத்துவது பிரம்மிக்க வைக்கிறது" என குறிப்பிட்டுள்ளார். 


    • இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஜி.எஸ்.டி ஆணையர் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யக் கோரி 2020-ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்தார்.
    • இந்த மனுவிற்கு ஜி.எஸ்.டி ஆணையர் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இவர் தனது படைப்புகளின் காப்புரிமையை முழுமையாக பட தயாரிப்பாளர்களுக்கு வழங்காததற்காக, ரூ.6.79 கோடி ரூபாய் சேவை வரி செலுத்த வேண்டும் என ஜி.எஸ்.டி ஆணையர் 2019-ஆம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

    இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரி கடந்த 2020-ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், இசை படைப்புகளின் காப்புரிமை, பட தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக வழங்கிய பின் தன்னிடம் வரி வசூலிப்பது சட்டவிரோதம்.


    ஏ.ஆர்.ரகுமான்

    தன் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஜி.எஸ்.டி. ஆணையர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். ரூ.6.79 கோடி வரி செலுத்தவில்லை என கூறி, ரூ.6.79 கோடி அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.எஸ் டி. நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

    இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஜி.எஸ்.டி. ஆணையர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே ஏ.ஆர்.ரகுமானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவரது புகழை களங்கப்படுத்தும் நோக்கம் ஏதும் இல்லை.


    ஏ.ஆர்.ரகுமான்

    ஜி.எஸ்.டி. புலனாய்வு பிரிவு சேகரித்த தகவலின் அடிப்படையிலேயே வரி விதிக்கப்பட்டது. அதை செலுத்தாததால் அபராதம் விதிக்கப்பட்டது என பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜி.எஸ்.டி. துறையிலேயே மேல்முறையீடு செய்து தீர்வை பெறாமல் தொடரப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும், வரி மற்றும் அபராத தொகைகளை வசூலிக்க விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் எனவும் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளார்.

    • பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பொன்னியின்செல்வன்". இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தில் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்பட முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.


    பொன்னியின் செல்வன்

    "பொன்னியின் செல்வன்" திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து படக்குழுவினர் தீவிரமாக புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


    பொன்னியின் செல்வன் படக்குழு

    இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பேசியதாவது, "இயக்குனர் மணிரத்னத்திற்கு நன்றி கூறுகிறேன். 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தை பார்த்த பின்னர் ஓடிடி தளங்களில் வெளிநாட்டு தொடர்களை பார்ப்பதை நிறுத்திவிட்டேன். நமது கலாசாரத்தை 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகவும் அழகாக பிரதிபலிக்கிறது" என்று பேசினார்.

    ×