search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஏ.ஆர்.ரகுமான் புகழை களங்கப்படுத்தும் நோக்கம் இல்லை.. ஜி.எஸ்.டி ஆணையர் பதில் மனு தாக்கல்..
    X

    ஏ.ஆர். ரகுமான்

    ஏ.ஆர்.ரகுமான் புகழை களங்கப்படுத்தும் நோக்கம் இல்லை.. ஜி.எஸ்.டி ஆணையர் பதில் மனு தாக்கல்..

    • இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஜி.எஸ்.டி ஆணையர் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யக் கோரி 2020-ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்தார்.
    • இந்த மனுவிற்கு ஜி.எஸ்.டி ஆணையர் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இவர் தனது படைப்புகளின் காப்புரிமையை முழுமையாக பட தயாரிப்பாளர்களுக்கு வழங்காததற்காக, ரூ.6.79 கோடி ரூபாய் சேவை வரி செலுத்த வேண்டும் என ஜி.எஸ்.டி ஆணையர் 2019-ஆம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

    இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரி கடந்த 2020-ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், இசை படைப்புகளின் காப்புரிமை, பட தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக வழங்கிய பின் தன்னிடம் வரி வசூலிப்பது சட்டவிரோதம்.


    ஏ.ஆர்.ரகுமான்

    தன் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஜி.எஸ்.டி. ஆணையர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். ரூ.6.79 கோடி வரி செலுத்தவில்லை என கூறி, ரூ.6.79 கோடி அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.எஸ் டி. நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

    இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஜி.எஸ்.டி. ஆணையர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே ஏ.ஆர்.ரகுமானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவரது புகழை களங்கப்படுத்தும் நோக்கம் ஏதும் இல்லை.


    ஏ.ஆர்.ரகுமான்

    ஜி.எஸ்.டி. புலனாய்வு பிரிவு சேகரித்த தகவலின் அடிப்படையிலேயே வரி விதிக்கப்பட்டது. அதை செலுத்தாததால் அபராதம் விதிக்கப்பட்டது என பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜி.எஸ்.டி. துறையிலேயே மேல்முறையீடு செய்து தீர்வை பெறாமல் தொடரப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும், வரி மற்றும் அபராத தொகைகளை வசூலிக்க விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் எனவும் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளார்.

    Next Story
    ×