search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எழுத்துகள்"

    • குழந்தைகளின் நாக்கில் 3 முறை தேனை தொட்டு வைத்தனர்.
    • பிள்ளையார் சுழி எழுதி அதற்கு பின்பு தமிழ் உயிர் எழுத்துக்கள் எழுதப்பட்டன.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில்பி ரசித்தி பெற்ற சரஸ்வதி அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவில் ஒட்டக்கூத்தரால் பாடல் பெற்ற ஆலயமாகும். ஒட்டக்கூத்தர் வாழ்ந்த ஊர் என்பதாலும் அவர் வழிபட்ட தலம் என்பதாலும் இந்த ஊருக்கு கூத்தனூர் என்று பெயர் பெற்றது.

    இந்தக் கோவிலில் சரஸ்வதி பூஜை விழா நேற்று கொண்டாடப்பட்டது.

    அதையொட்டி வெண்பட்டு ஆடை அணிந்து பக்தர்களுக்கு சரஸ்வதி அம்மன் அருள் பாலித்தார்.

    தொடர்ந்து பாத தரிசன நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இன்று விஜயதமி யையொட்டி கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் சரஸ்வதி அம்மனுக்கு இன்று சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக அலங்காரங்கள் செய்யப்ப ட்டன.

    அதனைத் தொடர்ந்து தங்களது குழந்தைகளுடன் வந்த ஏராளமான பெற்றோர்கள் அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு நடத்திய பின்னர், நெல்மணிகளை பரப்பி அதில் தங்களது குழந்தைகளை தமிழ் உயிர் எழுத்தின் முதல் எழுத்தான அவை எழுதவைத்து வித்யாரம்பம் செய்து வைத்தனர்.

    முன்னதாக குழந்தைகளின் நாக்கில் மூன்று முறை தேனை தொட்டு வைத்த பின்பு அவர்கள் காதுகளில் மந்திரங்களை சொல்லி அதன் பின்னர் நெல்மணி களில் பிள்ளையார் சுழி எழுதி அதற்கு பின்பு தமிழ் உயிர் எழுத்துக்கள் எழுதப்பட்டன.

    இன்று பள்ளிகளில் தங்களது குழந்தைகளை சேர்த்தால் கல்வியறிவு மேன்மையையும் என்பது ஐதீகம் அதன் அடிப்படையில் குழந்தைகள் உடன் பெற்றோர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர்.

    விஜயதசமி விழாவை ஒட்டி தமிழக முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து அம்மனை வழிபட்டனர்.

    கூட்ட நெரிசலை தவிர்க்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    ×