search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரி"

    • காலை 10 மணிக்கு அறிவியல் பாடப்பிரிவுக்கும், காலை 10.30 மணிக்கு கலைப் பிரிவுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
    • அரசின் இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் கல்லூரி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூா் எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கல்லூரியில் இளநிலை மாணவிகள் சோ்க்கைக்கான 2ம் கட்ட கலந்தாய்வு நாளை 12-ந் தேதி (திங்கள்கிழமை) நடைபெறுகிறது என்று முதல்வா் எழிலி தெரிவித்துள்ளாா்.இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:- திருப்பூா் எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுகளில் மாணவிகள் சோ்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த மே 30 முதல் ஜூன் 6 ந் தேதி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் உள்ள 1,066 இடங்களில் 923 இடங்கள் நிரம்பின. இந்நிலையில் மீதமுள்ள 143 இடங்களுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு 12 -ந் தேதி (திங்கள்கிழமை) நடைபெறுகிறது.

    இதில் காலை 10 மணிக்கு அறிவியல் பாடப்பிரிவுக்கும், காலை 10.30 மணிக்கு கலைப் பிரிவுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ள மாணவிகள் தங்கள் பெற்றோருடன் பங்கேற்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்ப நகல், சான்றிதழ் அசல் மற்றும் நகல் ஆகியவற்றை அவசியம் கொண்டு வர வேண்டும். அரசின் இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் கல்லூரி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே மாணவிகள் தங்கள் விண்ணப்ப எண்ணை உள்ளீடு செய்து தரவரிசை விவரங்களை தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • ரூ.1 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர், பிரிண்டர் எந்திரம் வாங்க காசோலை வழங்கப்பட்டது.
    • காசோலையை கல்லூரி முதல்வர் டாக்டர் எம்.ஆர்.எழிலி தலைமையில் கல்லூரி பேராசிரியைகள் பெற்றுக்கொண்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கபடிக்கழகத்தின் சார்பில் திருப்பூர் எல்.ஆர்.ஜி.அரசு மகளிர் கல்லூரிக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர், பிரிண்டர் எந்திரம் வாங்க காசோலை வழங்கப்பட்டது. காசோலையை மாவட்ட கபடிக்கழக செயலாளரும், மாநில கபடிக்குழு பொருளாளருமான ஜெயசித்ரா ஏ.சண்முகத்திடம் இருந்து கல்லூரி முதல்வர் டாக்டர் எம்.ஆர்.எழிலி தலைமையில் கல்லூரி பேராசிரியைகள் தமிழ்மலர், நளினி, அனுராதா, ஜெ.யுவராணி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

    உடன் மாவட்ட நடுவர் குழு தலைவர் நல்லாசிரியர் ஆர்.முத்துசாமி, மாவட்ட கபடிக்குழு கவுரவ உறுப்பினர் சச்சின் மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×