என் மலர்
உள்ளூர் செய்திகள்

காசோலை வழங்கப்பட்ட காட்சி.
திருப்பூர் மாவட்ட கபாடி கழகம் சார்பில் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரிக்கு ரூ.1 லட்சத்தில் கம்ப்யூட்டர், பிரிண்டர்
- ரூ.1 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர், பிரிண்டர் எந்திரம் வாங்க காசோலை வழங்கப்பட்டது.
- காசோலையை கல்லூரி முதல்வர் டாக்டர் எம்.ஆர்.எழிலி தலைமையில் கல்லூரி பேராசிரியைகள் பெற்றுக்கொண்டனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட கபடிக்கழகத்தின் சார்பில் திருப்பூர் எல்.ஆர்.ஜி.அரசு மகளிர் கல்லூரிக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர், பிரிண்டர் எந்திரம் வாங்க காசோலை வழங்கப்பட்டது. காசோலையை மாவட்ட கபடிக்கழக செயலாளரும், மாநில கபடிக்குழு பொருளாளருமான ஜெயசித்ரா ஏ.சண்முகத்திடம் இருந்து கல்லூரி முதல்வர் டாக்டர் எம்.ஆர்.எழிலி தலைமையில் கல்லூரி பேராசிரியைகள் தமிழ்மலர், நளினி, அனுராதா, ஜெ.யுவராணி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
உடன் மாவட்ட நடுவர் குழு தலைவர் நல்லாசிரியர் ஆர்.முத்துசாமி, மாவட்ட கபடிக்குழு கவுரவ உறுப்பினர் சச்சின் மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story






