search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எதிர்க்கட்சி அமளி"

    காவிரி விவகாரம், ரபேல் ஒப்பந்த ஊழல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மக்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. #WinterSession #LokSabhaAdjourned
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத் தொடரின் துவக்கத்தில் இருந்தே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் மாநிலம் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். உறுப்பினர்களின் அமளி காரணமாக அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இன்றும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் அமளி நீடித்தது.

    மக்களவை காலை 11 மணிக்கு தொடங்கியதும், 2001ல் நடந்த பாராளுமன்ற தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அவை நடவடிக்கைகள் தொடங்கின. அப்போது காவிரி விவகாரம் தொடர்பாக அதிமுக எம்பிக்கள் முழக்கங்கள் எழுப்பினர்.



    இதேபோல் ரபேல் ஒப்பந்த ஊழல் தொடர்பாக காங்கிரஸ் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு தெலுங்குதேசம் கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டனர். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு சட்டம் இயற்ற வலியுறுத்தி ஆளுங்கட்சியின் கூட்டணி கட்சியான சிவசேனா எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர்.

    இதனால் அவையில் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனால் முதலில் 20 நிமிடங்களும், பின்னர் மதியம் வரையும் அவை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகும் அமளி தொடர்ந்ததால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. #WinterSession #LokSabhaAdjourned 
    ×