search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலகக் கோப்பை தகுதிச்சுற்று"

    • அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • ஹசரங்கா 10 ஓவர்களில் 79 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த ஆட்டத்தில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா 10 ஓவர்களில் 79 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். இதன் மூலம் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸின் உலக சாதனையை ஹசரங்கா சமன் செய்துள்ளார்.

    ஹசரங்கா முந்தைய இரு ஆட்டங்களில் முறையே ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக 6 விக்கெட்டும், ஓமனுக்கு எதிராக 5 விக்கெட்டும் வீழ்த்தியிருந்தார்.

    சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் 5 விக்கெட் வீழ்த்திய 2-வது பவுலர் என்ற சிறப்பை அவர் பெற்றார். ஏற்கனவே பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் 1990-ல் தொடர்ந்து 3 முறை 5 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

    அவருடன் அந்த அரிய சாதனை பட்டியலில் 25 வயதான லெக்ஸ்பின்னர் ஹசரங்கா இப்போது இணைந்துள்ளார்.

    ×