search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உற்சாக"

    • தமிழகத்தில் கள ஆய்வில் முதல்-அமைச்சர்’ என்ற திட்டத்தின்படி ஆய்வு செய்வதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் விமான நிலையம் வந்தார்.
    • சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம்,சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் மற்றும் உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

    சேலம்:

    'தமிழகத்தில் கள ஆய்வில் முதல்-அமைச்சர்' என்ற திட்டத்தின்படி ஆய்வு செய்வதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் விமான நிலையம் வந்தார். முதல்-அமைச்சருடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தலைமைச் செயலாளர் இறையன்பு, முதல்-அமைச்சரின்தனிப்பிரிவு செயலாளர் உதயச்சந்திரன் ஆகியோர் உடன் வந்தனர். விமான நிலையம் முன்பு காவல்துறை சார்பில் நடந்த அணிவகுப்பு மரியாதையை முதல்-அமைச்சர் ஏற்றுக்கொண்டார். அவருக்கு தமிழக காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு, சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம்,சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் மற்றும் உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

    விமான நிலையத்தில் முதல்-அமைச்சருக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதனையடுத்து முதல்-அமைச்சர் கள ஆய்வில் கலந்து கொள்வதற்காக அங்கிருந்து காரில் புறப்பட்டு சேலம் வந்தார். வழிநெடுகிலும் அவருக்கு சாலையின் இருபுறமும் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். 

    தலைவாசலில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    ஆத்தூர்:

    அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் கூட்டத்தை முடித்து விட்டு இன்று தனது சொந்த ஊரான சேலத்திற்கு கார் மூலம் வந்தார்.

    சேலம் மாவட்டம் தலைவாசல் கூட்டுரோடு டோல்கேட் அருகே அவருக்கு அ.தி.மு.க.வினர் கெங்கவல்லி எம்.எல்.ஏ. நல்லதம்பி தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினார்கள்.

    வரவேற்பு நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் தலைவாசல் ராமசாமி, பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு மோகன், கெங்கவல்லி ராஜா, ரமேஷ், ஆத்தூர் ஒன்றிய செயலாளர் வி.பி.சேகர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜெயகாந்தன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளர் வாசுதேவன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் அருண்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    ×