search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயர்கல்வியில் சேர சிறப்பு முகாம்"

    • பிளஸ்-2 முடித்த அனைத்து மாணவர்களும் உயர்கல்வியில் சேர சிறப்பு முகாம்கள் நடந்தது.
    • வருகிற 4-ந்தேதி சிவகாசி யிலும், 8-ந்தேதி சாத்தூரிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கடந்த கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர விண்ணப்பிக்காத மாணவ- மாணவிகளுக்கு "உயர்வுக்கு படி" என்ற உயர்கல்விக்கான வழிகாட்டுதல் முகாம் நடந்தது.

    மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார் தலைமை தாங்கினார். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் முகாமை தொடங்கி வைத்து முகாமின் மூலம் பயன்பெற்ற 11 மாணவர்களுக்கு உயர்கல்வி பயில்வ தற்கான ஆணைகளை அமைச்சர் வழங்கினார்.

    பின்னர் அமைச்சர் கூறியதாவது:-

    நமது விருதுநகர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 7,575 மாணவ- மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். அதில் 7226 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் 4,421 பேர் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்துள்ளனர்.

    இதில் 3,332 பேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி களிலும், 595 பேர் பொறி யியல் கல்லூரிகளிலும், 48 பேர் மருத்துவக் கல்லூரி களிலும் சேர விண்ணப் பித்துள்ளனர்.

    உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத 2,805 மாணவ-மாணவிகளை கண்டறிந்து, அவர்களை மேல் படிப்பில் சேர்ப்ப தற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் மூலம் தற்போது 586 மாணவர்கள் மேல் படிப்பில் சேராமல் உள்ளனர்.

    அவர்களும் உயர்கல்விக்கு விண்ணப்பிக்கும் வகையில், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, நரிக்குடி மற்றும் திருச்சுழி பகுதிகளில், இதுவரை கல்லூரியில் சேர விண்ணப்பிக்காத 202 மாணவ- மாணவிகளை கண்டறிந்து, அவர்களுக்கு வழிகாட்டுதல் அளிக்கும் வகையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் "உயர்வுக்கு படி" என்ற உயர்கல்விக்கான வழிகாட்டுதல் முகாம் இன்று நடந்தது.

    இதன் தொடர்ச்சியாக வருகிற 4-ந்தேதி சிவகாசி யிலும், 8-ந்தேதி சாத்தூரிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

    தமிழக அரசு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் தேவை உள்ள பாடப்பிரிவுகளில் கூடுதலாக மாணாக்கர்களை சேர்ப்பதற்கு அனுமதியும், மாணவர்கள் சேர்க்கைக்கான கால நீட்டிப்பும் செய்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×