search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயர்கல்வி வழிகாட்டல்"

    • மதுரை அருகே உயர்கல்வி வழிகாட்டல் முகாம் நடக்கிறது.
    • வருகிற 7-ந்தேதி அன்று உசிலம்பட்டியிலும், 8-ந்தேதி திருமங்கலத்திலும் நடைபெற உள்ளது.

    மதுரை

    மதுரை மாவட்டம் மேலூர் அரசுக் கலைக் கல்லூரியில் "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் "உயர்வுக்குப் படி" என்ற தலைப்பில் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் முகாம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் சங்கீதா தலைமை தாங்கி பேசியதாவது:-

    தமிழக அரசு மாணவ- மாணவிகளின் நலனை கருத்திற்கொண்டு "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, மதுரை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் பிளஸ்2 படித்து தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர விண்ணப்பிக்காத மாணவ, மாணவியர்களுக்கு "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டல் முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இம்முகாமில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லுாரிகளில் விண்ணப்பித்தல், சேர்க்கை, கல்விக் கடன் உதவித்தொகை, முதல் பட்டதாரி சான்றிதழ், இருப்பிடச் சான்று, சாதிச் சான்று, வருமானச்சான்று மற்றும் விடுதியில் தங்கி படித்தல் உள்ளிட்ட சேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், அனைத்து கல்வி நிறுவனங்கள், திறன்பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான வழிகாட்டுதலையும் கல்லுாரிக்கான சேர்க்கை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இம்முகாமின் தொடர்ச்சியாக 03.07.2023-அன்று மதுரையிலும், வருகிற 7-ந்தேதி அன்று உசிலம்பட்டியிலும் மற்றும் 8-ந்தேதி ்ன்று திருமங்கலத்திலும் நடைபெறவுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சரவணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கார்த்திகா, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் டாக்டர் சண்முகசுந்தர் , மேலூர் வருவாய் கோட்டாட்சியர் பிரிதோஷ் பாத்திமா, அரசு உயர் அலுவலர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • அரசு பள்ளி மாணவர்கள், 12ம் வகுப்பு முடித்த நிலையில் உயர்கல்வி தொடர்பாக பல்வேறு கேள்விகள், சந்தேகங்கள் எழுகின்றன.
    • பிளஸ் 2 தேர்வு எழுதிய தேர்வு எழுதாத, இடைநின்ற மற்றும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும்.

    தாராபுரம்:

    நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில், உயர்கல்வி வழிகாட்டல் ஆலோசனைக் குழு வரும் ஜூன் மாதம் 6 -ந்தேதி முதல் செயல்பட உள்ளது.இக்குழுவில் தலைமையாசிரியர், உயர்வழிகாட்டல் பயிற்சி பெற்ற முதுகலை ஆசிரியர், முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர், துணைத் தலைவர், கல்வியாளர், கருத்தாளர் மற்றும் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் இடம்பெறவுள்ளனர்.

    உடுமலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில், உயர்கல்வி வழிகாட்டல் ஆலோசனைக் குழு அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இது குறித்து பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது:-

    அரசு பள்ளி மாணவர்கள், 12ம் வகுப்பு முடித்த நிலையில் உயர்கல்வி தொடர்பாக பல்வேறு கேள்விகள், சந்தேகங்கள் எழுகின்றன. இதற்கு பள்ளி அளவிலான உயர்கல்வி வழிகாட்டல் குழு வாயிலாக 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதிய தேர்வு எழுதாத, இடைநின்ற மற்றும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும்.உயர்கல்விக்கு தயார் செய்வதும், விண்ணப்பிக்கச் செய்வதும் இக்குழுவின் முக்கிய பணியாகும். இது தொடர்பான அறிக்கை தயார் செய்யப்பட்டும் வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    ×