search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உத்தரபிரதேச தேர்தல்"

    உத்தரபிரதேசத்தில் 74 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா கூறியுள்ளார். #AmitShah #BJP

    லக்னோ:

    உத்தரபிரதேசத்தில் முகல்சராய் எனும் ரெயில் நிலையத்தில் கடந்த 1968-ம் ஆண்டு தீன்தயாள் உபாத்யாய் மரணம் அடைந்தார்.

    இதையடுத்து அந்த ரெயில் நிலையத்துக்கு தீன்தயாள் உபாத்யாய் பெயரை சூட்ட வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டது. தற்போது அந்த ரெயில் நிலையத்துக்கு தீன்தயாள் உபாத்யாய் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    இதற்கான விழா நேற்று நடந்தது. அதில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்டார். அவர் பேசும்போது கூறியதாவது:-

    அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ராகுல் தனது உண்மையான கருத்தை தெரிவிக்க வேண்டும். அவர் இதில் எத்தகைய நிலைப்பாட்டில் இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

     


    வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவியவர்கள் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று ராகுல் விரும்புகிறாரா? ஒரு ஊடுருவல்காரர் இந்தியாவில் தங்க அனுமதிக்கப்படமாட்டாது.

    பா.ஜ.க. எடுத்து வரும் இத்தகைய நடவடிக்கைகள் எப்படி அமைந்துள்ளன என்று உத்தரபிரதேச மாநில மக்களுக்கு நன்றாக தெரிந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க. செல்வாக்கு வளர்ந்துள்ளது.

    கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க. 73 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. அடுத்த ஆண்டு நடக்க உள்ள தேர்தலில் பா.ஜ.க. 74 இடங்களில் நிச்சயம் வெற்றி பெறும்.

    உத்தரபிரதேசத்தில் மாயாவதி கட்சியும் அகிலேஷ் யாதவ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் எங்களுக்கு கவலை இல்லை. அவர்களால் பா.ஜ.க.வை எதுவும் செய்ய இயலாது.

    இவ்வாறு அமித்ஷா கூறினார். #AmitShah #BJP

    ×