search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உத்தர பிரதேச முதல்வர்"

    • கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தியதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
    • தற்போது 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் செயல்படுகின்றன.

    சர்வதேச சுகாதார பாதுகாப்பு தினத்தையொட்டி மாநில சுகாதார அமைச்சர்களின் 2 நாள் மாநாடு உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற நிறைவு விழாவில் உரையாற்றிய மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளதாவது:

    கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்தியதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. கொரோனாவிற்கு எதிரான இந்திய தடுப்பூசி உலகிற்கு ஒரு முன்மாதிரியாக செயல்பட்டது. தரமான தடுப்பூசிகளை இந்தியா தயாரித்துள்ளது. அதன் செயல்திறன் உலகம் முழுவதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியா தனது சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை விரைந்து சீரமைக்க கொரோனா தொற்று நோயை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டது. 


    2014 ஆம் ஆண்டில் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் மட்டுமே இருந்தன. தற்போது 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் செயல்படுகின்றன. விரைவில் நாடு முழுவதும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் செயல்படத் தொடங்கும் தருவாயில் உள்ளன. மத்திய அரசின் மருத்துவ சேவைத்திட்டம், ஊட்டச்சத்து திட்டம் மற்றும் தடுப்பூசித் திட்டம் போன்ற முதன்மைத் திட்டங்கள் சுகாதாரத்துறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த மாநாட்டில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா, ஜார்க்கண்ட் சுகாதாரத்துறை அமைச்சர் பன்னா குப்தா, சிக்கிம் சுகாதாரத்துறை அமைச்சர் எம் கே ஷர்மா, உத்தரகாண்ட் சுகாதாரத்துறை அமைச்சர் தன் சிங் ராவத் மற்றும் சிக்கிம் சுகாதாரத்துறை அமைச்சர் சபன் ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×