search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உண்டியல்கள் திறப்பு"

    • கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு அதில் பக்தர்கள் செலுத்தப்பட்டு இருந்த காணிக்கைகள் எண்ணப்பட்டது.
    • அதில் 32 கிராம் தங்கம், 495 கிராம் வெள்ளி ஆகியவை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்

    பவானி:

    பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.

    இந்த கோவிலின் பின்னால் உள்ள இரட்டை விநாயகர் சன்னதி படித்துறை பகுதியில் காவிரி பவானி கண்ணுக்கு புலப்படாத அமுதநதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம், தென்னகத்தின் காசி, பரிகார ஸ்தலம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் உள்ளூர், வெளியூர் வெளி மாநில பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடன் உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.

    அவ்வப்போது சங்கமேஸ்வரர் கோவிலில் பல்வேறு இடங்களில் உள்ள உண்டியல்கள் இந்து அறநிலை துறை அதிகாரிகள் முன்னிலையில் கோவில் பணியாளர்கள் திறந்து சமூக ஆர்வலர்கள் மூலம் உண்டியல்களில் உள்ள பணம் எண்ணப்பட்டு வருகிறது.

    அதேபோல் பவானி சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள ஆதிகேசவர் பெருமாள் சன்னதி மண்டபத்தில் சங்கமேஸ்வரர் கோவில் அதிகாரிகள் முன்னிலையில் பல்வேறு இடங்களில் உள்ள கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு அதில் பக்தர்கள் செலுத்தப்பட்டு இருந்த காணிக்கைகள் எண்ணப்பட்டது.

    அதில் ரூ.15 லட்சத்து 83 ஆயிரத்து 616 ரொக்க பணமாகவும், 32 கிராம் தங்கம், 495 கிராம் வெள்ளி ஆகியவை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர் என்று சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.


    ×