search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண் திடீர் சாவு"

    • சம்பவத்தன்று வேலை க்கு செல்லாமல் வீட்டில் இருந்தவர் தனது குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக சென்றார்.
    • மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது அந்த பெண் மயக்கமடைந்த நிலையில் இருந்ததால் அவரை சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் வ.உ.சி.3-வது தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜ்(37). இவரும் தீபா(31) என்பவரும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஹரிகரசுதன் என்ற மகனும், விகாசினி என்ற மகளும் உள்ளனர். பாண்டியராஜ் கொத்தனார் வேலை பார்த்து வந்தார். தீபாவிற்கு கடந்த 2 வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    சம்பவத்தன்று வேலை க்கு செல்லாமல் வீட்டில் இருந்த பாண்டியராஜ் தனது குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக சென்றார். மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது தீபா மயக்கமடைந்த நிலையில் இருந்தார். உடனடியாக அவரை சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தனது மனைவியின் சாவில் உள்ள மர்மம் குறித்து விசாரிக்க வேண்டும் என அவரது கணவர் கொடுத்த புகாரின்பேரில் சின்னமனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது.
    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே உள்ள அன்னஞ்சி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் விஸ்வா (வயது 25). இவர் உளுந்தூர் பேட்டையைச் சேர்ந்த பிரியதர்ஷினி (22) என்பவரை 4 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு கணவன்-மனைவி இருவரும் தேனி அன்னஞ்சி வீட்டில் வசித்து வந்தனர்.

    பிரியதர்ஷினிக்கு அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது. சம்பவத்தன்று அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அவரது மாமியார் மீனாட்சி க.வி லக்கு அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

    ஆனால் சிகிச்சையில் இருந்த பிரியதர்ஷினி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அல்லிநகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணம் ஆகி 4 வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ. மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

    ×