search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இறுதி மரியாதை"

    • இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணா நெஞ்சுவலி ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார்.
    • மின் மயானத்தில் 21 குண்டுகள் முழங்க போலீசார் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

    பு.புளியம்பட்டி:

    கோவை மாவட்டம் சிறுமுகை பழத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் கண்ணா (வயது 50). இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர்.

    ரமேஷ் கண்ணா திருவாரூர் மாவட்டம் பரவக்கோட்டை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வந்தார்.

    இந்நிலையில் இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியி ல்லாமல் சிறுமுகை பழத்தோட்டத்தில் உள்ள தனது சொந்த வீடு மற்றும் பகுத்தம்பாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்து வந்தார்.

    அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் ரமேஷ் கண்ணா நெஞ்சுவலி ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார்.

    இதனையடுத்து மறைந்த இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணா உடலுக்கு இறுதி மரியாதை காவல் துறையின் சார்பில் சத்திய மங்கலம் மின் மயானத்தில் 21 குண்டுகள் முழங்க போலீசார் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இதில் போலீஸ் துணை சூப்பிரண்டு ஐமன் ஜமால் உள்பட போலீசார் இறுதி மரியாதை செலுத்தினர்.

    • வந்தவாசிக்கு 45 வருடங்களுக்கு முன்பு வந்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மாம்பட்டு கிராமத்திற்கு சுமார் 45 வருடங்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து அனாதையாக ஆதரவு தேடி வந்த நபருக்கு அந்த கிராமத்தைச் சேர்ந்த நபர்களே சபரி முத்து என பெயர் வைத்து வீடு வீடாக தினமும் 3 வேலையும் அவருக்கு உணவு வழங்கி வந்தார்.

    இந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக உடல் நல குறைவால் இருந்த சபரி முத்துவை செங்கல்பட்டு அரசு மருத்து வமனையில் அனுமதித்து ஊர் மக்கள் உதவியுடன் சிகிச்சை அளித்தனர். நேற்று முன்தினம் சபரிமுத்து சிகிச்சை பலனின்றி இறந்தார் .முதியவரின் பிணத்தை பிரேத பரிசோதனை செய்து கிராம மக்களிடம் ஒப்படைத்தனர்.

    அனாதையாக வந்த நபருக்கு மாம்பட்டு கிராமமே ஒன்றிணைந்து ஊர்வ லமாக கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.

    அனாதையாக வந்த சபரிமுத்துக்கு 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று திரண்டு பெண்கள் கண்ணீர் சிந்தியும் மேள தாளத்துடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்த நிகழ்வு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×