என் மலர்
நீங்கள் தேடியது "last respects to the body"
- கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் கடந்த 21-ம் தேதி உயிரிழந்தார்.
- ஜனாதிபதி திரவுபதி முர்மு வாடிகனில் போப் பிரான்சிஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
வாடிகன் சிட்டி:
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் (88), கடந்த 21-ம் தேதி காலை 7.35 மணிக்கு உயிரிழந்தார். கல்லீரல் அழற்சி நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், பக்கவாதம் மற்றும் மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது.
போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு இன்று காலை 10:00 மணிக்கு நடைபெறுகிறது. வாடிகனில் திரண்டுள்ள மத குருக்கள், பொதுமக்கள் போப் ஆண்டவருக்கு இறுதி விடை கொடுக்கத் தயாராகி வருகிறார்கள்.
போப் பிரான்சிஸ் இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மனைவியுடன் பங்கேற்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
இதற்கிடையே, ஜனாதிபதி திரவுபதி முர்மு வாடிகன் சிட்டி சென்று போப் பிரான்சிஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜுவும் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில், கடந்த 3 நாட்களில் போப் பிரான்சிஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தியவர்களின் எண்ணிக்கை இரண்டரை லட்சத்தைக் கடந்துள்ளது என வாடிகன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணா நெஞ்சுவலி ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார்.
- மின் மயானத்தில் 21 குண்டுகள் முழங்க போலீசார் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
பு.புளியம்பட்டி:
கோவை மாவட்டம் சிறுமுகை பழத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் கண்ணா (வயது 50). இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர்.
ரமேஷ் கண்ணா திருவாரூர் மாவட்டம் பரவக்கோட்டை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வந்தார்.
இந்நிலையில் இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியி ல்லாமல் சிறுமுகை பழத்தோட்டத்தில் உள்ள தனது சொந்த வீடு மற்றும் பகுத்தம்பாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்து வந்தார்.
அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் ரமேஷ் கண்ணா நெஞ்சுவலி ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார்.
இதனையடுத்து மறைந்த இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணா உடலுக்கு இறுதி மரியாதை காவல் துறையின் சார்பில் சத்திய மங்கலம் மின் மயானத்தில் 21 குண்டுகள் முழங்க போலீசார் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் போலீஸ் துணை சூப்பிரண்டு ஐமன் ஜமால் உள்பட போலீசார் இறுதி மரியாதை செலுத்தினர்.






