search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இமானுவேல் சேகரன்"

    • இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம்-மதுரை வழித்தடத்தில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • 41 இடங்களில் போலீஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பரமக்குடியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இமானுவேல்சேகரன் நினைவு தினத்தையொட்டி வெளி மாவட்டங்களில் இருந்து வரும் அரசு மற்றும் தனியாா் பஸ்கள் பரமக்குடி நகருக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பஸ்கள் அனைத்தும் ராமநாதபுரம், தேவிபட்டினம், ஆா்.எஸ்.மங்கலம், திருவாடானை, சருகனி, காளையாா்கோவில், சிவகங்கை, பூவந்தி வழியாக மதுரைக்கு செல்ல வேண்டும்.

    மதுரையில் இருந்து வரும் பஸ்கள் பூவந்தி, சிவகங்கை, காளையாா்கோவில், சருகனி என அதே பாதையில் ராமநாதபுரம் வந்து ராமேசுவரம் செல்ல வேண்டும்.

    பரமக்குடி வருவோா் சொந்த வாகனங்களில் வரவேண்டும் உள்ளிட்ட 11 நிபந்தனைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். ஐகோர்ட்டு உத்தரவின்படி பதாகைகள் அமைப்பதை தவிா்க்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் 160 வழித்தடங்கள் தடை செய்யப்பட்டவை ஆகும்.

    அனுதியின்றி பரமக்குடிக்கு 4 மற்றும் 2 சக்கர வாகனங்களில் வருபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.மாவட்டத்தில் 131 பகுதிகள் பதற்றம் நிறைந்தவையாக அடையாளம் காணப்ப ட்டுள்ளன. மாவட்ட எல்லையில் 41 இடங்களில் போலீஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • அரசு போக்குவரத்து கழகம் மூலம் பரமக்குடிக்கு கூடுதல் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பரமக்குடியில் நாளை இமானுவேல் சேகரன் நினைவு அஞ்சலி செலுத்த வருபவர்கள் போலீசாரின் அறிவுரைப்படி அனுமதி பெற்ற சாலை வழியாக வந்து செல்ல வேண்டும். மாவட்டம் முழுவதும் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.

    அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எந்த பகுதியிலும் சிறிய பிரச்சினை வராமல் தடுக்கும் வகையில் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    அரசு போக்குவரத்து கழகம் மூலம் பரமக்குடிக்கு கூடுதல் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 1500 போலீசாருடன் பிற மாவட்டங்களைச் சேர்ந்த 3500 போலீசார் வரவழைக்கப்பட்டு 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    நினைவு தின நிகழ்ச்சி அனைவரின் ஒத்துழைப்புடன் எந்த வித இடையூறும் இன்றி அமைதியாக நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×