search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இத்தாலிய பிரதமர்"

    • பிரதர்ஸ் ஆஃப் இத்தாலியின் சந்திப்பில் ரிஷி சுனக், எலான் மஸ்க் ஆகியோரும் பங்கேற்றனர்
    • ஐரோப்பிய கலாச்சாரம் மதிக்கும் கோட்பாடுகளும், அளிக்கும் உரிமைகளும் உயர்வானவை என்றார் மெலோனி

    மத்திய தரைக்கடல் பகுதி வழியாக ஐரோப்பாவிற்குள் தஞ்சம் புக அகதிகள் சிறு கப்பல்கள் மூலம் தினசரி வந்து கொண்டே இருக்கிறார்கள். சமீப சில காலங்களாக இவ்வாறு நுழையும் அகதிகளால் உள்நாட்டில் சட்ட சிக்கல்கள் ஏற்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன. பல ஐரோப்பிய நாடுகளின் தேர்தல்களில் வாக்குகளை ஈர்க்க இதை ஒரு விவாத பொருளாக சில தலைவர்கள் முன்னெடுத்தனர்.

    சட்ட விரோதமாக ஐரோப்பிய நாடுகளில் நுழைவதை கட்டுப்படுத்த கடுமையான முடிவுகளை எடுக்க அந்நாடுகளின் தலைவர்கள் பல கட்டமாக சந்தித்து வருகின்றனர்.

    அகதிகள் நுழைவதை கட்டுப்படுத்த இத்தாலி தலைநகரான ரோம் நகரில், Giorgio Meloni) தீவிர வலது சாரி அமைப்பான பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி (Brothers of Italy) அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ஜியோர்ஜியோ மெலோனி (உரையாற்றினார். இதில் இங்கிலாந்தின் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் ஆகியோரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தனது உரையில் மெலோனி தெரிவித்ததாவது:

    நமது கலாச்சாரத்துடன் இஸ்லாமிய கலாச்சாரம் இணைவது கடினம் என நான் நினைக்கிறேன். இத்தாலியில் உள்ள பல இஸ்லாமிய கலாச்சார மையங்கள் சவுதி அரேபியாவின் நிதியுதவியால் நடப்பவை என்பதை நான் கவனிக்காமல் இல்லை. சவுதி அரேபியா நாட்டில் மத கோட்பாடுகளை கை விடுவது, தன்பாலின சேர்க்கை போன்றவைகளுக்கு மரண தண்டனை, கல்லெறி தண்டனை போன்றவற்றை வலியுறுத்தும் ஷரியா (Sharia) சட்டம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த கலாச்சாரத்தை ஐரோப்பிய நாடுகளில் அவர்கள் புகுத்த நினைக்கிறார்கள். ஆனால், ஐரோப்பிய நாகரிகம் பல தசாப்தங்களாக வளர்த்து வந்த மதிப்புக்குரிய அம்சங்களிலிருந்தும் மக்களுக்கு அளிக்கும் உரிமைகளிலிருந்து இந்த கலாச்சாரம் மாறுபட்டு நிற்கிறது. நான் ஷரியா சட்டத்தை இத்தாலியில் புகுத்த அனுமதிக்க மாட்டேன்.

    இவ்வாறு மெலோனி கூறினார்.

    கடந்த 2022 அக்டோபர் முதல் ஐரோப்பியாவின் முக்கிய நாடான இத்தாலியில், பிரதமராக பதவி வகிக்கும் ஜியோர்ஜியா மெலோனி (46), தீவிர வலதுசாரி ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 8வது ரைசினா உரையாடலில் மெலோனி முதன்மை விருந்தினராகவும், முக்கிய பேச்சாளராகவும் பங்கேற்கிறார்.
    • பிற்பகலில், மெலோனி ஜனாதிபதி திரெளபதி முர்முவைச் சந்திக்கிறார்.

    இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி இன்று காலை இந்தியா வந்துள்ளார். இவரை, டெல்லி விமான நிலையத்தில் சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பவார் வரவேற்றார்.

    இத்தாலிய பிரதமருடன், துணை பிரதமர், வெளியுறவு அமைச்சர் அன்டோனியோ தாஜானியும், அதிக சக்தி வாய்ந்த வணிக பிரதிநிதிகளும் உடன் வந்தனர்.

    இன்று மாலை நடைபெறும் 8வது ரைசினா உரையாடலில் மெலோனி முதன்மை விருந்தினராகவும், முக்கிய பேச்சாளராகவும் பங்கேற்கிறார். மெலனிக்கு ராஷ்டிரபதி பவனின் முன்னறிவிப்பில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    பின்னர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மெலோனி ஆகியோர் பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விவாதங்களை நடத்துகிறார்கள்.

    பிற்பகலில், மெலோனி ஜனாதிபதி திரெளபதி முர்முவைச் சந்திக்கிறார். இந்த ஆண்டு இந்தியாவும் இத்தாலியும் இருநாட்டு உறவுகளை நிறுவி இந்த ஆண்டுடன் 75 ஆண்டுகள் ஆன நிலையில் கொண்டாடுகின்றன.

    ×