search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஞ்சி விலை"

    • இஞ்சி விலை வரலாறு காணாத வகையில் கிலோ 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
    • மொத்த காய்கறி விற்பனை கடையில் 255 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

    கடலூர்:

    இந்தியா முழுவதும் கடந்த சில தினங்களாக காய்கறி வாங்குவது அனைவருக்கும் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. இதில் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தக்காளி 130 ரூபாய்க்கும், சாம்பார் வெங்காயம் 150 ரூபாய்க்கும் விற்பனையாகி வந்ததால் முதற்கட்டமாக சென்னை மாநகரில் ரேஷன் கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ரூபாய் 92, 88 ஆகிய விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வந்ததால் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் அதிர்வலை யை ஏற்படுத்தியது. மேலும் பீன்ஸ், பச்சை மிளகாய் போன்ற விலையும் அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில தினங்களாக தொடர்ந்து காய்கறி விலைகள் அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருவதால் அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருவ தோடு, குறைந்த அளவில் காய்கறி வாங்கி செல்கின்றனர்.

    இந்த நிலையில் தற்போது இஞ்சி விலை வரலாறு காணாத வகையில் கிலோ 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு 190 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் சில்லரை கடையில் 280 ரூபாய்க்கும், மொத்த காய்கறி விற்பனை கடையில் 255 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

    மேலும் சாம்பார் வெங்காயம் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 30 ரூபாய் விலை உயர்ந்து 90 ரூபாய்க்கும், தக்காளி விலை 88 ரூபாய் முதல் 92 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதில் தற்போது ஆறுதலாக 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பச்சை மிளகாய் 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது குறித்து வியாபாரி ஒருவரிடம் கேட்டபோது, கர்நாடகா மாநிலத்தில் இருந்து இஞ்சி வருவதால் அங்கு பலத்த மழை பெய்து வரும் காரணத்தினால் இஞ்சி கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக 190 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வந்த இஞ்சி தற்போது 255 முதல் 280 ரூபாய்க்கு வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் சாம்பார் வெங்காயமும் 60 ரூபாயிலிருந்து 90 ரூபாய்க்கு தற்போது விலை ஏற்றம் காரணமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. கடந்த சில வருடங்களில் இஞ்சி விலை 200 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படாத நிலையில் வரலாறு காணாத வகையில் விலை உயர்ந்து தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. மேலும் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடர் மழை காரணமாக அடிப்படைத் தேவையான காய்கறி விலை அதிகளவில் உயர்ந்து விற்பனை செய்யப் பட்டு வருகின்றது. இதன் காரணமாக வியாபாரி களும் .மக்களும் பெரும் அவதி அடைந்து வருகிறோம் என்றார்.

    • கடந்த சில நாட்களாக இஞ்சி விளைச்சல் பாதியாக குறைந்துள்ளது.
    • இதன் எதிரொலியாக இஞ்சி கிலோவுக்கு 3 மடங்கு விலை உயர்ந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழ்நாட்டில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் வரத்தாகி வருகிறது.

    குறிப்பாக ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு இஞ்சி கேரளா, மைசூர், தாளவாடி, கூடலூர் போன்ற பகுதிகளில் இருந்து விற்பனைக்கு வருகிறது.

    வழக்கமாக 6 டன் வரை விற்பனைக்கு வரும். ஆனால் கடந்த சில நாட்களாக இஞ்சி விளைச்சல் பாதியாக குறைந்துள்ளது. இதனால் இஞ்சி வரத்து குறைந்துள்ளது.

    இதன் எதிரொலியாக இஞ்சி கிலோவுக்கு 3 மடங்கு விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ரூ.60 முதல் ரூ.80 வரை விற்கப்பட்ட ஒரு கிலோ இஞ்சி இன்று ஒரு கிலோ ரூ.220 முதல் ரூ.240 வரை கிடுகிடுவென விலை உயர்ந்து விற்கப்படுகிறது.

    இஞ்சியில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளதால் விலை உயர்ந்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

    ×