search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆேலாசனை கூட்டம்"

    • மதுரை மண்டல தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 20-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு பெரிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி கலெக்டரிடம் மனு கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

    மதுரை

    தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரை நாடார் மகாஜன மேன்சன் மினி அரங்கத்தில் நடந்தது. மண்டல தலைவர் மைக்கேல்ராஜ் தலைமை தாங்கினார்.

    ஜெயக்குமார், பிரபாகரன், சுவீட்ராஜன் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ், மோட்டார் உதிரி பாக விற்பனையாளர் சங்கம் கண்ணழகன், மாநில துணைத்தலைவர் சூசை அந்தோணி, சில்வர் சிவா, கரண்சிங், கார்த்தி, காந்தி, செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பேசினர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    வணிக வரித்துறையி னரால் நடத்தப்படும் "டெஸ்ட் பர்ச்சேஸ்" என்ற அடிப்படையில் கடைகளில் நடைபெறும் அத்துமீறலை ரத்து செய்யவேண்டும்.

    வாகன விதி மீறல் என்ற பெயரில் நடைபெறும் அதிரடி நடவடிக்கையை தடை செய்யவேண்டும்.

    மின்சார கட்டணம், பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் போன்ற எரிபொருளின் விலை உயர்வால் ஏழை மக்களின் வாழ்வாதாரம், வாகன ஓட்டிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மின் கட்டணத்தை மாதம் ஒருமுறை கணக்கிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறோம்.

    கப்பலூர் சுங்கச் சாவடியை அகற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.யின் தியாகத்தை போற்றும் வகையில் 100 அடி வெண்கல சிலை அமைத்து கப்பலில் நிற்பது போல் வடிவமைத்து சென்னை, தூத்துக்குடி, குமரி கடற்கரையில் நிறுவ தமிழக அரசை கேட்டுக்கொள்வது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மேற்கண்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கலெக்டர் அலுவலகம் முன்பு பெரிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி கலெக்டரிடம் மனு கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

    இந்த கூட்டத்தில் கண்ணன், பழம், ரவிச்சந்திரன், முத்துராஜ், சுருளி, கோகுலம் கணேசன், பெருமாள், ஜெயராஜ், கணேசன், செந்தில்குமார், மகளிரணி விக்டோரியா, பாக்கியலட்சுமி, கோகிலா, சித்தலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை மாவட்ட துணை தலைவர் குட்டி என்ற அந்தோணி ராஜ் செய்திருந்தார்.

    ×