search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆரிஃப் முகமது கான்"

    • பல்கலைக்கழகங்களில் சங்பரிவார் அமைப்புகளுக்கு ஆதரவாக ஆளுநர் செயல்படுவதாக கூறி போராட்டம்.
    • கேரள மாநில அரசு தனக்கு போதுமான பாதுகாப்பு அளிக்கவில்லை- ஆளுநர் குற்றச்சாட்டு

    கேரள மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் திருவனந்தபுரத்தில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எஸ்.எஃப்.ஐ. மாணவர்கள் அவரது காரை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

    இதனால் கோபம் அடைந்த ஆளுநர் ஆரிஃப் முகமது கான் காரில் இருந்து கீழே இறங்கி ஆவேசமாக பேசினார். அப்போது கேரள மாநில அரசு தனக்கு போதுமான பாதுகாப்பு அளிக்கவில்லை என குற்றம்சாட்டினார். மேலும், "இது முதல்வரின் சதி. எனக்கு உடல் ரீதியாக காயம் ஏற்படுத்த முதல்வர் பினராயி விஜயன் ஆட்களை அனுப்புகிறார். அரசியலமைப்பு சீர்குலைவது போல் தெரிகிறது. அரசியலமைப்பு இயந்திரத்தின் சீர்குலைவை அனுமதிக்க முடியாது" என்றார்.

    பல்கலைக்கழகங்களில் சங்பரிவார் அமைப்புகளுக்கு ஆதரவாக ஆளுநர் செயல்படுவதாக குற்றம்சாட்டி எஸ்.எஃப்.ஐ. மாணவர்கள் கருப்புக்கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கேரள மாநில அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்வதாக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×