search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆம்னி அம்புலன்ஸ்"

    • அரசு ஆம்புலன்ஸ் செல்வதற்கு முன்பாக தனியார் ஆம்புலன்ஸ்கள் விபத்தான இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதாக புகார் எழுந்துள்ளது.
    • 10-க்கும் மேற்பட்ட தனியார் ஆம்னி அம்புலன்ஸ்கள் வரிசை கட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூரில் அரசு பொது மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரி ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய வட்டாரங்களின் தலைமை மருத்துவமனை என்பதால் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். 100-க்கும் மேற்பட்ட உள்நோயளி களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தனியார் ஆம்புலன்கள்

    ஓமலூர் வழியாக தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகள் செல்கிறது. இந்த வழியாக லட்சக்க ணக்கான வாகனங்கள் வந்து செல்வதால், விபத்துக்கள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. விபத்தில் சிக்கியவர்களை, ஓமலூர் அரசு மருத்துவமனையின் 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் மீட்டு வந்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதற்கிடையே ஓமலூர் அரசு மருத்துவமனை முன்பாக 10-க்கும் மேற்பட்ட தனியார் ஆம்னி அம்புலன்ஸ்கள் வரிசை கட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனால் தகவல் கிடைத்ததும், அரசு ஆம்புலன்ஸ் செல்வதற்கு முன்பாக தனியார் ஆம்புலன்ஸ்கள் விபத்தான இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதாக புகார் எழுந்துள்ளது.

    சிக்கல்

    இந்த நிலையில், தற்போது ஓமலூர் அரசு மருத்துவமனை தேசிய தர நிர்ணயசான்று பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. தனியார் பங்க ளிப்புடன் ஆஸ்பத்திரியில் சுமார் 50 லட்ச ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டு, மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதனால், தேசிய தரச்சான்று வழங்கும் ஆய்வு குழுவினர் ஆய்வு செய்யும்போது தனியார் ஆம்புலன்ஸ்களை அரசு மருத்துவமனை முன்பு நிறுத்த கூடாது என்று மருத்துவமனை சார்பில் அறிவுறுத்தியும் தொடர்ந்து அங்கேயே நிறுத்தப்படுகிறது.

    அதனால், அரசு மருத்துவமனை சார்பில் ஓமலூர் போலீஸ் நிலை யத்தில் புகார் அளிக்கப்ப ட்டுள்ளது. ஆனாலும் , தொடர்ந்து தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவனையை சுற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

    ×