search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆபரேஷன் அஜய்"

    • இந்தியர்களை அழைத்துவர ஆபரேஷன் அஜய் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.
    • இஸ்ரேலில் இருந்து 2 நேபாளிகள் உள்பட 143 பயணிகளுடன் 6-வது சிறப்பு விமானம் டெல்லி வந்தது.

    புதுடெல்லி:

    இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனிடையே இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்பதற்காக ஆபரேஷன் அஜய் என்ற திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

    அதன்படி, இஸ்ரேலில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்கள் பத்திரமாக அழைத்து வரப்படுகின்றனர். இத்திட்டத்தின் மூலம் இஸ்ரேலில் இருந்து இதுவரை 5 சிறப்பு விமானங்களில் மொத்தம் 1,200 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர் என மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே, இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் நகரில் இருந்து இந்தியர்களை அழைத்துக் கொண்டு 6-வது சிறப்பு விமானம் நேற்று மாலை டெல்லி புறப்பட்டது.

    இந்நிலையில், 6-வது விமானம் இன்று அதிகாலை டெல்லி வந்தடைந்தது. இந்த சிறப்பு விமானம் மூலம் 2 நேபாள குடிமக்கள் உள்பட 143 பேர் டெல்லி வந்தடைந்தனர் என மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய அரசு ஆபரேஷன் அஜய் திட்டத்தை கடந்த புதன்கிழமை தொடங்கியது.
    • இஸ்ரேலில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த 147 பேர் இதுவரை வந்துள்ளனர்.

    சென்னை:

    இஸ்ரேல் நாட்டுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் ஏற்பட்ட போர் காரணமாக இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பலர் நாடு திரும்பி வருகின்றனர்.

    இந்தியாவுக்கு வர விருப்பம் தெரிவித்தவர்களை அழைத்து வர மத்திய அரசு 'ஆபரேஷன் அஜய்' திட்டத்தை கடந்த புதன்கிழமை தொடங்கியது.

    அதன்படி, ஏர் இந்தியா விமானம் மூலம் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரத்தில் இருந்து 212 இந்தியர்கள் முதல்கட்டமாக நாடு திரும்பினார்கள். 2-வது கட்டமாக 235 பேரும், 3-வது கட்டமாக 197 பேரும், 4-வது கட்டமாக 274 பேரும் டெல்லி வந்தனர். இப்போது 5-வது கட்டமாக 286 பேர் டெல்லி வந்தனர்.

    இந்நிலையில், இஸ்ரேலில் இருந்து 5 கட்டமாக டெல்லி வந்த விமானங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 147 பேர் இதுவரை வந்துள்ளனர். அவர்களை தமிழக அதிகாரிகள் வரவேற்று அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.

    இன்று அதிகாலை வந்த விமானத்தில் 23 தமிழர்கள் வந்திருந்தனர். இதில் 17 பேர் சென்னைக்கும், 4 பேர் கோவைக்கும், 2 பேர் மதுரைக்கும் விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதுபற்றி தமிழக அதிகாரிகள் கூறுகையில், இஸ்ரேலில் இருந்து இதுவரை 121 தமிழர்கள் அரசு சார்பிலும் 26 பேர் சொந்த செலவிலும் தமிழகம் வந்துள்ளனர். மொத்தம் 147 பேர் வந்துள்ள நிலையில் இன்னும் 11 பேர் இஸ்ரேலில் உள்ளனர். அவர்கள் வெவ்வேறு நகரங்களில் பாதுகாப்பாக இருப்பதாகவும், இப்போது தமிழகம் வர விருப்பம் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். ஆனாலும் நாங்கள் தினமும் அவர்களைத் தொடர்பு கொண்டு பேசி வருகிறோம். அவர்கள் வர விரும்பினால் அழைத்து வருவதற்கும் அரசு தயாராக உள்ளது என தெரிவித்தனர்.

    • இந்தியர்களை அழைத்துவர ஆபரேஷன் அஜய் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.
    • அதன்படி, இன்று 4வது விமானத்தில் 274 இந்தியர்கள் டெல்லி வந்தடைந்தனர்.

    புதுடெல்லி:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

    நேற்றைய 8-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

    இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் அங்குள்ள இந்தியர்களை தாய்நாட்டுக்கு பத்திரமாக அழைத்து வருவதற்கான 'ஆபரேஷன் அஜய்' என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, இஸ்ரேல் நாட்டில் சிக்கித் தவித்த 447 இந்தியர்கள் தனி விமானம் மூலம் இந்தியா வந்தடைந்துள்ளனர்.

    இன்று அதிகாலை 3வது விமானத்தில் 197 இந்தியர்கள் டெல்லி வந்தடைந்தனர்.

    இந்நிலையில், இஸ்ரேல் நாட்டில் சிக்கித் தவித்த 274 இந்தியர்களுடன் இந்தியா புறப்பட்ட 4வது விமானம் இன்று காலை டெல்லி வந்தடைந்தது என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

    இதுவரை 800க்கும் அதிகமான இந்தியர்கள் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • இந்தியர்களை அழைத்துவர ஆபரேஷன் அஜய் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.
    • அதன்படி, நேற்று முதல் விமானத்தில் 212 இந்தியர்கள் டெல்லி வந்தடைந்தனர்.

    புதுடெல்லி:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

    நேற்றைய 7-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

    இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் அங்குள்ள இந்தியர்களை தாய்நாட்டுக்கு பத்திரமாக அழைத்து வருவதற்கான 'ஆபரேஷன் அஜய்' என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, இஸ்ரேல் நாட்டில் சிக்கித் தவித்த 212 இந்தியர்களுடன் தனி விமானம் நேற்று காலை இந்தியா வந்தடைந்தது.

    இந்நிலையில், இஸ்ரேல் நாட்டில் சிக்கித் தவித்த 235 இந்தியர்களுடன் இந்தியா புறப்பட்ட 2வது விமானம் இன்று காலை டெல்லி வந்தடைந்தது என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

    • சிறப்பு விமானம் இன்று இஸ்ரேல் சென்றுள்ளது.
    • இஸ்ரேலில் போர் பதற்றம் காரணமாக அங்கு வசிக்கும் தமிழர்களில் 114 பேர் நம்மிடம் உதவி கேட்டு உள்ளனர்.

    சென்னை:

    இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கு இடையே போர் நடைபெற்று வருகிறது. இதில் இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து உள்ளனர். பலர் காயம் அடைந்துள்ளனர்.

    இந்த சூழலில் இஸ்ரேல் நாட்டில் இந்தியர்கள் பலர் வசித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் இருந்து படிப்பதற்காகவும், வேலைக்காகவும் பலர் அங்கு சென்றுள்ளனர்.

    இந்த சூழலில் இஸ்ரேல் நாட்டில் உள்ள இந்தியர்கள் தாய் நாட்டுக்கு திரும்ப விரும்பினால் அவர்களை பத்திரமாக அழைத்து வருவதற்கான 'ஆபரேஷன் அஜய்' என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்து உள்ளது.

    இதற்கான சிறப்பு விமானம் இன்று இஸ்ரேல் சென்றுள்ளது. இஸ்ரேல் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு வர விருப்பம் தெரிவித்துள்ள இந்தியர்களை அழைத்துக் கொண்டு இந்த விமானம் டெல்லிக்கு வருகிறது.

    இந்த விமானத்தில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களும் வருகிறார்கள். இதுகுறித்து அதிகாரி ஜெசிந்தா கூறுகையில், இஸ்ரேலில் போர் பதற்றம் காரணமாக அங்கு வசிக்கும் தமிழர்களில் 114 பேர் நம்மிடம் உதவி கேட்டு உள்ளனர். அவர்கள் அனைவரும் தூதரக தொடர்பில் உள்ளனர்.

    இதில் தமிழ்நாட்டிற்கு வர விருப்பம் தெரிவித்தவர்களை அங்கிருந்து அழைத்து வர தேவையான ஏற்பாடுகளை அரசின் மூலம் செய்து வருகிறோம். மத்திய அரசு 'ஆபரேஷன் அஜய்' சிறப்பு விமானம் இயக்க உள்ளது. இன்று புறப்படும் அந்த விமானத்தில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களும் வர உள்ளனர்.

    இந்த சிறப்பு விமானம் டெல்லி வந்தடைந்ததும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை பத்திரமாக இங்கு அழைத்து வர சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×