என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆந்திரப் பிரதேசம்"

    • பாலில் யூரியா மற்றும் விஷத்தன்மை கொண்ட எத்திலீன் கிளைகோல் கலக்கப்பட்டுள்ளது
    • மூன்று குழந்தைகளுக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு, தீவிர சிகிச்சையில் உள்ளனர்

    ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கலப்படப் பால் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. மேலும் 11 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். கடந்த பிப்.16ம் தேதி அப்பகுதியில் உள்ள முதியவர்களுக்கு சிறுநீர் கழிப்பதில் சிரமம், வாந்தி, வயிற்று வலி மற்றும் கடுமையான சிறுநீரக செயலிழப்பு போன்ற அறிகுறிகள் எழுந்துள்ளன. இதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒவ்வொருவராக இறந்துள்ளனர். 

    பிப்.22 அன்று முதல் உயிரிழப்பு நடந்துள்ளது. 76 வயதான தாடி கிருஷ்ணவேணி என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து அவரது மகன் அளித்த புகாரைத் தொடர்ந்து ராஜமுந்திரி 3 டவுன் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் பாதிக்கப்பட்டவர்களின் இரத்த மாதிரிகள், அவர்களுக்கு வழங்கப்பட்ட பால் மற்றும் தயிர் ஆகியவை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. 

    விசாரணையில் எத்திலீன் கிளைக்கால் (Ethylene Glycol) எனும் நச்சு இரசாயனம் கலந்த பாலை குடித்ததால் பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்தப் பாலை இவர்களுக்கு விநியோகித்த கணேஸ்வர ராவ் என்பவரை போலீசார் கைது செய்தனர். 

     

    • இந்தியாவில் இந்தத் தடையை கொண்டுவரும் முதல்மாநிலம் கர்நாடகா.
    • அடுத்த 90 நாட்களுக்குள் தடை நடைமுறைப்படுத்தப்படும்

    கர்நாடகாவைத் தொடர்ந்து ஆந்திரப் பிரதேசத்திலும் 13 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்பை அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று சட்டப்பேரைவையில் வெளியிட்டார். அடுத்த 90 நாட்களுக்குள் இந்தத் தடை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

    மேலும் 16 வயது வரை உள்ள சிறுவர்களுக்கும் கட்டுப்பாடுகளை விரிவுபடுத்துவது குறித்து நிபுணர்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. இன்றுகாலை கர்நாடக அரசு, பட்ஜெட் தாக்கலின்போது 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத் தடை விதிப்பதாக அறிவித்தது. அதனைத்தொடர்ந்து தற்போது ஆந்திர மாநில அறிவிப்பும் வந்துள்ளது.

    சிறுவர் மற்றும் சிறுமிகளிடையே அதிகரித்து வரும் மொபைல் போன் போதை (Mobile Addiction), மனநலப் பாதிப்புகள் மற்றும் கல்வித் தரக் குறைவு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இருமாநில அரசுகளும் தெரிவித்துள்ளன. 

    ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் ஏற்கனவே இதுபோன்ற சட்டங்கள் அமலில் உள்ளன. இந்நிலையில் இந்தியாவில் இதுபோன்ற சட்டத்தை கொண்டுவரும் முதல் மாநிலமாக கர்நாடகா உள்ளது. அதனைத்தொடர்ந்து ஆந்திரா அதனை பின்பற்றியுள்ளது. 

    • 18 வயது வரை அக்குழந்தைக்கு இலவசக் கல்வி வழங்கப்படும்.
    • கருவுறுதல் விகிதம் 1.5 ஆகக் குறைந்துவிட்டது.

    ஆந்திரப் பிரதேசத்தில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை சரிசெய்ய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு புதிய திட்டங்களை அறிவித்து வருகிறார்.

    அந்த வகையில் சட்டப்பேரவையில் 'புதிய மக்கள் தொகை மேலாண்மைக் கொள்கை' குறித்த வரைவுத் திட்டத்தை அவர் வெளியிட்டார்.

    அதில், இரண்டாவது, மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிகளுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.

    மூன்றாவது குழந்தைக்கு 5 வயது வரை மாதம் ரூ.1,000 ஊட்டச்சத்து உதவித்தொகையாக வழங்கப்படும். 18 வயது வரை அக்குழந்தைக்கு இலவசக் கல்வி வழங்கப்படும்.

    குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்க்கு 12 மாதங்கள் விடுமுறையும், தந்தைக்கு 2 மாதங்கள் விடுமுறையும் வழங்ப்படும்.

    அரசு மருத்துவமனைகளில் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு PPP முறையில் IVF சிகிச்சை வழங்கப்படும் ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

    ஆந்திராவின் மொத்தக் கருவுறுதல் விகிதம் 1.5 ஆகக் குறைந்துவிட்டது, இது 2.1 ஆக உயர வேண்டும் என்பது அரசின் இலக்கு என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

    இந்த வரைவுத் திட்டம் குறித்து ஒரு மாதம் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டும் என்றும் மார்ச் மாத இறுதிக்குள் கொள்கை இறுதி செய்யப்பட்டு, ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • நான் அவரிடம் (மோடியிடம்) ஒரே ஒரு விஷயத்தைக் கேட்டுக் கொண்டேன்.
    • ஊழல் செய்பவர்களை எளிதாகப் பிடிக்க முடியும்

    ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு ரூ.500 நோட்டை ஒழிக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.

    கடப்பாவில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பின் போது பேசிய சந்திரபாபு நாயுடு, ரூ. 500 நோட்டுகளை நிறுத்த வேண்டும்.

    இப்போது அதிகமான மக்கள் டிஜிட்டல் பணத்தைப் பயன்படுத்துவதால், அனைத்து பெரிய நோட்டுகளையும் நீக்குவது ஊழலைக் குறைக்க உதவும் என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர் 2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது பிரதமர் மோடியிடம் டிஜிட்டல் நாணயம் குறித்த அறிக்கையைச் சமர்ப்பித்ததை நினைவு கூர்ந்தார்.

    "நான் அவரிடம் (மோடியிடம்) ஒரே ஒரு விஷயத்தைக் கேட்டுக் கொண்டேன். இன்று, நீங்கள் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை ரத்து செய்துவிட்டு, புதிய ரூ.2,000 நோட்டை அறிமுகப்படுத்துகிறீர்கள். தேவைப்பட்டால், ரூ.500, ரூ.1,000 மற்றும் ரூ.2,000 நோட்டுகளை ரத்து செய்யுங்கள்.

    டிஜிட்டல் நாணயத்தை அறிமுகப்படுத்துங்கள்.ஊழல் செய்பவர்களை எளிதாகப் பிடிக்க முடியும்" என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

    மேலும், பெரிய ரூபாய் நோட்டுகள் நிறுத்தப்பட்டால் மட்டுமே ஊழல் முடிவுக்கு வரும். மத்திய அரசு விரைவில் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சந்திரபாபு நாயடு வலியுறுத்தினார்.  

    • அந்த நிலத்தை டிராக்டர் மூலமாக சமப்படுத்தும் பணியில் ராஜசேகர் ஈடுபட்டார்.
    • அப்போது அங்கு வந்த பெற்றோர், அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

    ஆந்திர பிரதேச மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி அப்பலநாயுடு-ஜெயம்மா. இவர்களது மகன் ராஜசேகர்.

    இவர்களுக்கு சொந்தமாக நிலம் உள்ளது. இந்த நிலத்தை ராஜசேகர் விற்க விரும்பியுள்ளார். ஆனால் அதற்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை.

    இந்நிலையில் நேற்று மாலை அந்த நிலத்தை டிராக்டர் மூலமாக சமப்படுத்தும் பணியில் ராஜசேகர் ஈடுபட்டார்.

    அப்போது அங்கு வந்த பெற்றோர், அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த மகன் ராஜசேகர், பெற்றோர் என்றும் பார்க்காமல் அப்பலநாயுடுவையும், ஜெயம்மாவையும் டிராக்டரை ஏற்றி கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

    சொத்து தகராறில் நடந்த இந்த பயங்கர சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இமயமலைக்கு ஆன்மீகப் பயணம் சென்று சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் அவசர பயணமாக தற்போது டெல்லி விரைந்துள்ளார்.
    • மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளத்தற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

    பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள உள்ள நிலையில் அரசியல் களம் பரபரப்பாக மாறியுள்ளது. பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

    இன்று தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ள மோடி 3வது முறையாக மீண்டும் பிரதமராகப் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக இமயமலைக்கு ஆன்மீகப் பயணம் சென்று சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் அவசர பயணமாக தற்போது டெல்லி விரைந்துள்ளார்.

     

    அவரது டெல்லி பயணத்துக்குக் காரணம் இன்னும் தெரியவராத நிலையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி மாபெரும் வெற்றியை பெற்றதற்கு அதன் தலைவரும் தனது நண்பருமான தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

    மேலும் ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக உள்ள சந்திரபாபு நாயுடுவுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளதற்கும் மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளத்தற்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பீர்களா என்ற கேள்விக்கு, அதைக் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று ரஜினி தெரிவித்துள்ளார். 

     உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • ஆந்திர முதல்-மந்திரியாக சந்திரபாபு நாயுடு பதவியேற்கும் விழா இன்று காலை விஜயவாடாவில் பிரமாண்டமாக நடந்தது.
    • சந்திரபாபு நாயுடுவை கட்டியணைத்து வாழ்த்திய மோடி, மேடையில் இருந்த அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து ஏனைய பிரபலங்களை நலம் விசாரித்தார்.

    ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் உள்ள தெலுங்குதேசம் கட்சி அமோக வெற்றி பெற்றதை அடுத்து ஆந்திர முதல்-மந்திரியாக சந்திரபாபு நாயுடு பதவியேற்கும் விழா இன்று காலை விஜயவாடாவில் பிரமாண்டமாக நடந்தது.

    விழாவில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ஜேபி நட்டா, தமிழக பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன், நடிகர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா,மகாராஷ்டிரா முதலவர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் ஏனைய அரசியல் சினிமா பிரமுகர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

    முதலில் சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநில முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். அவரை அடுத்து ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாணும் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். மற்ற அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு கவர்னர் நசீர் அகமது பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    சந்திரபாபு நாயுடுவை கட்டியணைத்து வாழ்த்திய மோடி, மேடையில் இருந்த அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து ஏனைய பிரபலங்களை நலம் விசாரித்தார். பவன் கல்யாணும் அவரது அண்ணன் சிரஞ்சீவியும் மோடியை மேடைக்கு நடுவே அழைத்து வந்து கைகளைக் கோர்த்து உயர்த்திக்காட்டினர்.

    அவர்கள் இருவருடனும் மோடி குதூகலமாக உரையாடினார். அப்போது ரஜினிகாந்த், பாலகிருஷ்ணா உள்ளிட்டோர் மேடைக்கு வரவே சந்திரபாபு நாயுடு மோடியை அவர்களிடம் அழைத்துச்சென்றார். ரஜினிகாந்த்துடன் கை குலுக்கிய மோடி, லதா ரஜினிகாந்திடம் நலம் விசாரித்தார். பின்னர் அருகில் நின்றிருந்த பாலகிருஷ்ணா, தமிழிசை ஆகியோருக்கு உற்சாகமாக வணக்கம் வைத்தார். பிரபலங்கள் பலர் ஓரே மேடையில் நிறைந்திருந்த இந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

    • சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக முதல்வர் பதவி ஏற்றார்.
    • பவன் கல்யான் துணை முதல்வராக பதவி ஏற்றார்.

    ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம்,ஜனசேனா, பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது.

    175 பேரவை தொகுதிகளில் 164 தொகுதிகளையும், 25 மக்களவை தொகுதிகளில் 21 தொகுதிகளிலும் தெலுங்கு தேசம் கூட்டணி வெற்றி பெற்றது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக முதல்வர் பதவி ஏற்றார்.

    அந்த வகையில், ஆந்திரப் பிரதேசத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அமைச்சரவையின் இலாக்கா அறிவிக்கப்டட்டுள்ளது.

    முதல்வர் சந்திரபாபு நாயுடு பொது நிர்வாகத் துறை, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட துறைகளை தன்வசம் வைத்துள்ளார்.

    அதன்படி, பவன் கல்யாண் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சித் துறை, ஊரக குடிநீர் விநியோகம், வனத்துறை, சுற்றுச்சூழல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகள் பவன் கல்யானுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ், அமைச்சரவையில் 3வது இடத்தில் உள்ளார். அவருக்கு, மனிதவள மேம்பாடு, ஐ.டி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

    அச்சன் நாயுடுவுக்கு விவசாயம், கூட்டுறவு உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு.

    உள்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் அனிதாவிற்கு ஒதுக்கீடு.

    சுகாதாரத்துறை அமைச்சர் சத்திய குமார் யாதவுக்கு ஒதுக்கீடு.

    ஆந்திரா நிதியமைச்சராக பையாலுவா கேசவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    டாக்டர் நிம்மலா ராம நாயுடுவுக்கு நீர்வளத்துறை ஒதுக்கீடு.

    • ஆந்திர சட்டமன்றத்தில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
    • ஆளும் கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏக்களில் 80 சதவீதம் பேர் கும்பலாக எழுந்து நின்றனர்.

    ஆந்திரப் பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலுடன் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியிடம் ஆட்சியிலிருந்த ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. அம்மாநிலத்தில் மொத்தம் உள்ள மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களிலும், அதனுடன் கூட்டணியில் உள்ள நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி 21 இடங்களிலும் வென்றது. ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 11 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. மீதம் உள்ள 8 இடங்களில் பாஜக வென்றது.

    இதற்கிடையில் நாடாளுமன்றத் தேர்தலிலும் தெலுங்கு தேசம் ஜன சேனா கட்சிகள் கணிசமான இடங்களில் வென்ற நிலையில் அவை இடம்பெற்றுள்ள பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கவும் முக்கிய காரணியாகச் செயல்பட்டது.

    மேலும் சட்டமன்றத் தேர்தலின் வெற்றியைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். துணை முதல்வராகப் பவன் கல்யாண் பதவி ஏற்றார். இந்நிலையில் சந்திரபாபு நாயுடு தங்களின் ஓ.எஸ்.ஆர் கட்சியைப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருவதாக ஜெகன் மோகன் ரெட்டி குற்றம் சாட்டி வருகிறார். இந்த நிலையில் தான் நேற்று முன் தினம் நடந்த ஆந்திர சட்டமன்றத்தில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

    சட்டமன்றத்தில் எம்.எல்.ஏக்களை நோக்கி பேசிய சந்திரபாபு நாயுடு, யார் மீதெல்லாம் ஜெகன் மோகன் ஆட்சியில் பொய் வழக்குகள் பதியப்பட்டதோ அவர்கள் கொஞ்சம் எழுந்து நில்லுங்கள் என்று சொல்லவே ஆளும் கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏக்களில் 80 சதவீதம் பேர் [160 எம்எல்ஏக்கள்] கும்பலாக எழுந்து நின்றனர். இதில் துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் பல்வேறு அமைச்சர்களும் அடங்குவர்.

    எம்.எல்.ஏக்கள் கூண்டோடு எழுந்துநின்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பின்னர் சபாநாயகரைப் பார்த்துப் பேசிய சந்திரபாபு நாயுடு, பார்த்தீர்களா, இத்தனை போரையும் ஜெகன் சிறைக்கு அனுப்ப முயன்றார் ஆனால் இவர்கள் அனைவரையும் மக்கள் நேராகச் சட்டமன்றத்துக்கு அனுப்பியுள்ளனர் என்று தெரிவித்தார். போலீசை வைத்து ஜனநாயகத்தின் வேர்களையே ஒய்.எஸ்.ஆர் தாக்கியுள்ளது. மாநிலத்தையே கஜானாவையே ஜெகன்மோகன் திவாலாகியுள்ளார் என்று சாடினார்.

    முன்னதாக கடந்த வருடம் சந்திரபாபு நாயுடுவும் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது இவ்வாறிருக்க ஜெகன் மோகன் ஆட்சியின் சட்டம் ஒழுங்கு குறித்த வெள்ளை அறிக்கையை சந்திரபாபு நாயுடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். 

    • 2019 முதல் 2024 வரை முதல்வர் அலுவலகத்துக்காக ரூ.3.62 கோடிக்கு முட்டை பப்ஸ்கள் வாங்கப்பட்டுள்ளது,
    • முட்டையின் ஓடு உடைந்து குஞ்சு பொரிவது போல ஜெகன் பற்றிய உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவருவதாகத் தெலுங்கு தேசம் விமர்சித்துள்ளது.

    தற்போதைய ஆந்திர மாநில அரசியலில் முட்டை பப்ஸ் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. ஆம்.. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் இருந்த சமயத்தில் முதல்வர் அலுவலகத்துக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 993 முட்டை பப்ஸ்கள் வாங்கப்பட்டு வந்துள்ளது என்று தெலுங்கு தேசம் குற்றம் சாட்டியுள்ளது.

    ஜெகன் மோகன் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 2019 முதல் 2024 வரை ஆந்திரப் பிரதேசத்தில் ஆட்சியில் இருந்தது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலோடு ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலும் நடந்த நிலையில் என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெற்ற சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியிடம் படுதோல்வி அடைந்து ஆட்சியை இழந்தார் ஜெகன்.

    சந்திரபாபு நாயுடு முதல்வர் ஆனது முதல் தன்னை பழிவாங்கும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுள்ளதாக ஜெகன் குற்றம் சாட்டி வருகிறார். இந்த நிலையில் தான், ஜெகன் மோகன் ஆட்சிக்காலத்தில் 2019 முதல் 2024 வரை முதல்வர் அலுவலகத்துக்காக ரூ.3.62 கோடிக்கு முட்டை பப்ஸ்கள் வாங்கப்பட்டுள்ளது, வருடத்துக்கு ரூ.72 லட்சதுக்கு முட்டை பப்ஸ்கள் வாங்கப்பட்டுள்ளது என்று தெலுங்குதேசம் கட்சி கூறியுள்ளது.

    மக்கள் பணத்தை ஜெகன் மோகன் அனைத்து வகையிலும் தவறாகப் பயன்படுத்தியுள்ளதாகவும் முட்டையின் ஓடு உடைந்து குஞ்சு பொரிவது போல ஜெகன் பற்றிய உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவருவதாகத் தெலுங்கு தேசம் விமர்சித்துள்ளது.

    • மாட்டிறைச்சி கொழுப்பை பிரசாதமாகச் தாங்கள் சாப்பிட்டுள்ளோம் என்பது பக்தர்களை அசவுகரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
    • ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இதுபோன்ற குளறுபடிகள் நடக்காமல் இருக்க உபாயம் ஒன்றைச் சொல்லியுள்ளார்.

    உலகம் முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கான இந்துக்கள் வருகை தரும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டுக்கள் தயாரிப்பில் ஜகன்மோகன் ஆட்சியின் போது மாட்டிறைச்சி கொழுப்பு கலந்த நெய்யைப் பயப்படுத்தியுள்ளதாகச் சர்ச்சை எழுந்துள்ளது. இந்து மதத்தின் மாடு புனிதமான விலங்காகக் கருதப்படும் நிலையில் கடந்த காலங்களில் மாட்டிறைச்சி கொழுப்பை பிரசாதமாகச் தாங்கள் சாப்பிட்டுள்ளோம் என்ற எண்ணம் பக்தர்களை அசவுகரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

     

    இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நடவைடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். இந்நிலையில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இதுபோன்ற குளறுபடிகள் நடக்காமல் இருக்க உபாயம் ஒன்றைச் சொல்லியுள்ளார்.

    அதாவது, நாடு முழுவதும் உள்ள இந்து கோவில்களில் இதுபோன்ற பிரச்சனைகளை ஆராய தேசிய அளவில் 'சனாதன தர்ம பாதுகாப்பு[ரக்ஷனா] வாரியம்' என்ற அமைப்பை நிறுவும் நேரம் வந்துவிட்டது என்று தனது எக்ஸ் பக்கத்தில் கூட்டணியில் உள்ள மத்திய பாஜக அரசுக்கு யோசனை வழங்கியுள்ளார்.

    • விநியோகஸ்தர்கள் NABL சான்றிதழ் மற்றும் தயாரிப்பு தர சான்றிதழை வழங்க வேண்டும்.
    • எங்கள் ஆட்சியில் 18 முறை பொருட்களை நிராகரித்துள்ளோம்.

    உலகம் முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கான இந்துக்கள் வருகை தரும் இடமாக திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளது. இங்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் மிகவும் பிரபலம்.

    திருப்பதி கோவிலில் வழங்கும் லட்டு பிரசாதம் தயாரிப்பில் ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் ஜகன்மோகன் ரெட்டி ஆட்சியின் போது மாட்டிறைச்சி கொழுப்பு கலந்த நெய்யைப் பயப்படுத்தியதாகச் சர்ச்சை எழுந்துள்ளது.

    இந்து மத நம்பிக்கைகளின் படி, மாடு புனிதமான விலங்காகக் கருதப்படும் நிலையில் கடந்த காலங்களில் மாட்டிறைச்சி கொழுப்பை பிரசாதமாகச் தாங்கள் சாப்பிட்டுள்ளோம் என்ற எண்ணம் இந்து மத பக்தர்களை அசவுகரியத்தில் ஆழ்த்தியது.

    இந்த நிலையில், திருப்பதி கோவில் லட்டு பிரசாதத்தில் மாட்டிறைச்சி கொழுப்பு கலக்கட்டதாக கூறப்படும் புகார்களை ஆந்திர பிரதேச முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி முழுமையாக மறுத்துள்ளார்.

    இது குறித்து பேசிய அவர், "டெண்டர் செயல்முறை ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நிகழ்கிறது. ஆனால், தகுதி அளவுகோல் பல தசாப்தங்களாக மாறவே இல்லை. விநியோகஸ்தர்கள் NABL சான்றிதழ் மற்றும் தயாரிப்பு தர சான்றிதழை வழங்க வேண்டும்."

    "TTD நெய்யிலிருந்து மாதிரிகளை சேகரிக்கிறது, மேலும் சான்றிதழைப் பெற்ற தயாரிப்புகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. தெலுங்கு தேசம் மத விஷயங்களில் அரசியல் செய்கிறது. எங்கள் ஆட்சியில் 18 முறை பொருட்களை நிராகரித்துள்ளோம்," என தெரிவித்தார்.

    ×