என் மலர்
நீங்கள் தேடியது "கலப்பட பால்"
- சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டவர்களில் கனக ரத்தினம் உள்ளிட்ட 2 பேர் ஞாயிற்றுக்கிழமை இறந்தனர்.
- 12 பேரில் 8 பேரின் சிறுநீரகம் செயலிழந்து அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், ராஜ மகேந்திரவரம் அடுத்த கொடுகொண்டா, நரசாபுரத்தை சேர்ந்தவர் கணேஷ். பால் வியாபாரி. இவர் அதே பகுதியில் பால் சேகரிப்பு மையம் அமைத்து பல்வேறு ஊர்களுக்கு பால் விற்பனை செய்து வந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இவரிடம் பால் வாங்கி குடித்த பலருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு பல்வேறு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டவர்களில் கனக ரத்தினம் உள்ளிட்ட 2 பேர் ஞாயிற்றுக்கிழமை இறந்தனர்.
ராஜ மகேந்திரபுரம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ராமகிருஷ்ண மூர்த்தி (வயது 74). ஷேசகிரி ராவ் (22 ), ரமணி (58) ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு கலப்பட பால் விற்பனை செய்தவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்தார். சிகிச்சை பெற்று வருபவர்களின் மொத்த சிகிச்சை செலவை அரசு ஏற்றுக்கொள்ளும் என அறிவித்துள்ளார்.
அதிகாரிகள் கணேஷ் நடத்தி வந்த பால் சேகரிப்பு மையத்தில் ஆய்வு செய்தனர். அப்போது பாலை குளிரூட்டுவதற்காக எத்திலீன் கிளைகோள் என்ற ரசாயனம் பயன்படுத்தியது தெரியவந்தது.
இந்த ரசாயனம் கலந்த பாலை குடித்தவர்களுக்கு சிறுநீரகம் செயலிழந்து இறந்து விட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பால் வியாபாரி கணேசை போலீசார் நேற்று கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ள 12 பேரில் 8 பேரின் சிறுநீரகம் செயலிழந்து அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் உள்ளவர்களின் ரத்தம், சிறுநீர், கலப்பட பால் ஆகியவை மத்திய தடவிய ஆய்வகம், விசாகப்பட்டினம் மற்றும் ஐதராபாத்தில் உள்ள ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மருத்துவ குழுவினர் ஆய்வு செய்த காட்சி.
மருத்துவ குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மருத்துவ முகாம்களை நடத்தி வருகின்றனர்.
மேலும் அப்பகுதியின் நிலவரம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
- சில கேன்களில் பாலில் தண்ணீர் மற்றும் கெமிக்கல் கலப்படம் செய்திருப்பது தெரியவந்தது.
- அனைத்து பகுதிகளிலும் விநியோகம் செய்யப்படும் பால் தொடர்ந்து சோதனை செய்யப்படும் என்று கூறினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை ஆவின் நிறுவனம், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை, தூத்துக்குடி மாநகராட்சி சுகாதார அலுவலர்கள், காவல்துறையினர், தொழிலாளர் நலத்துறை இணைந்து புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து வினியோகத்திற்காக கொண்டு செல்லப்படும் பாலை நிறுத்தி சோதனை செய்தனர்.
இந்த அதிரடி சோதனையில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன், மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் ஸ்டாலின் பாக்கியநாதன், ராஜபாண்டி, ராஜசேகர், ஆவின் பொது மேலாளர் ராஜாகுமார், மத்தியபக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன், வடிவேல் ராஜா, சுபா, தொழிலாளர் நலத்துறை உதவியாளர் வள்ளுவன் உள்ளிட்ட அலுவலர்கள் பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட ஆவின் பால் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது சில கேன்களில் பாலில் தண்ணீர் மற்றும் கெமிக்கல் கலப்படம் செய்திருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து புதிய பஸ் நிலையம் அருகே நடத்தப்பட்ட சோதனையில் 600 லிட்டர் பாலும், பழைய பஸ் நிலையம் அருகே 800 லிட்டர் பாலும், டூவிபுரம் பகுதியில் சுமார் 200 லிட்டர் பாலும் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன் கூறுகையில், பொதுமக்கள் உடலுக்கு தீங்கு ஏற்படுத்தக்கூடிய வகையில் பால் கலப்படம் செய்து விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். இது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்படும்.
தூத்துக்குடி மட்டுமின்றி கோவில்பட்டி, திருச்செந்தூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் விநியோகம் செய்யப்படும் பால் தொடர்ந்து சோதனை செய்யப்படும் என்று கூறினார்.






