search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆதார் கார்டு"

    • வாக்காளர் அடையாள அட்டையில் அவர்களது ஆதார் கார்டு இணைக்கும் போது வேறு முகவரி இருக்கும்
    • வாக்காளர் பட்டியலில் ஆதார் கார்டு இணைக்கும் முயற்சியை கைவிட வேண்டும்

    நாகர்கோவில்:

    வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்டு இணைப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது.

    கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார்.மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலர்மேல் மங்கை, நாகர்கோவில் ஆர்.டி.ஒ. சேதுராமலிங்கம் கலெக்டரின் நேர்முக உதவியாளர் வீராசாமி தாசில்தார்கள் சுசீலா, சேகர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் ஜெயகோபால், தி.மு.க. சார்பில் ஆனந்த், வீர வர்க்கீஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் மனோகர ஜஸ்டஸ், பாரதிய ஜனதா சார்பில் ஜெகதீசன், தேமு.தி.க. சார்பில் செல்வகுமார் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்டு இணைப்பு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது தி.மு.க., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்டு இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொது மக்கள் வெளியூர்களில் வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் அந்த பகுதிகளில் ஆதார் கார்டு மற்றும் வீட்டு முகவரி பான் கார்டுகளை வாங்கி வைத்துள்ளார்கள். ஓட்டுரிமையை மட்டும் சொந்த ஊரில் வைத்திருப்பார்கள்.

    தற்பொழுது வாக்காளர் அடையாள அட்டையில் அவர்களது ஆதார் கார்டு இணைக்கும் போது வேறு முகவரி இருக்கும். இதனால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே வாக்காளர் பட்டியலில் ஆதார் கார்டு இணைக்கும் முயற்சியை கைவிட வேண்டும்

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    அ.தி.மு.க. ஜெயகோபால் பேசுகையில், நாகர்கோவில் மாநகரப் பகுதியில் வார்டுகள் மறுசீரமைப்புக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் உள்ளது. அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    அரசியல் கட்சியினர் கருத்துக் கள் தொடர்பாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அரவிந்த் உறுதி அளித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆதார்-பான் எண்ணை இணைக்க அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
    • அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை ரூ.1000 அபராதம் செலுத்தி பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கலாம்.

    புதுடெல்லி:

    ஒவ்வொருவரும் தன்னுடைய பான் கார்டு எண்ணை ஆதார் கார்டு எண்ணுடன் இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டது.

    இந்த இரு எண்களையும் இணைப்பதற்கு கடந்த மார்ச் 31-ந் தேதி வரை வருமான வரித்துறை அலுவலகம் அவகாசம் அளித்தது. அதன் பிறகு அந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு (2023) மார்ச் 31-ந் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    அதே நேரத்தில் கடந்த மார்ச் 31-ந் தேதிக்கு பிறகு பான் எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைப்பவர்களுக்கு ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி தற்போது ரூ.500 அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த ரூ.500 அபராதத்துடன் பான் எண், ஆதார் எண்ணை இணைக்க ஜூன். 30-ந் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு அபராதம் ரூ.1000 என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ரூ.500 அபராதத்துடன் கூடிய காலக்கெடு இன்றுடன் முடிகிறது.

    எனவே நாளை (1-ந் தேதி) முதல் இரண்டையும் இணைக்க அபராதம் ரூ.1000 ஆக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை ரூ.1000 அபராதம் செலுத்தி பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கலாம். அதற்குள் இணைக்காவிட்டால் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் தேதியில் இருந்து பான் கார்டு செயலற்றதாக மாறி விடும். அதன்பிறகு பான் எண்ணை எதிலும் பயன்படுத்த முடியாமல் போய் விடும் என்றும் வருமான வரித்துறை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    ×