search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆஞ்சநேயர் ஜெயந்தி"

    • பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க ஏற்பாடு
    • கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் நந்தவனத்தில் ஸ்ரீ ராமர் கோவில் உள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் நந்தவனத்தில் ஸ்ரீ ராமர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 22-வது ஆண்டு ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாநாளை (வியாழக்கிழமை) தொடங்கு கிறது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) வரைதொடர்ந்து 2 நாட்கள் நடக்கிறது. இதையொட்டிநாளை அதிகாலை 5 மணிக்கு மங்கள இசையுடன் விழா தொடங்குகிறது. 5.15 மணிக்கு ஸ்ரீ மகா கணபதி ஹோமும் 7 மணிக்கு அபிஷேகமும் நடக்கிறது. 7.30 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது 8 மணி முதல் மாலை 5 மணி வரை அகண்ட ராமநாம ஜெபம் நடக்கிறது. கொட்டாரம் ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் பஜனை குழுவினர் இந்த ஜெபத்தை நடத்துகிறார்கள். மாலை 5மணிக்குபஜனையும் இரவு 7 மணிக்கு தீபாராதனையும் இரவு 7.15 மணிக்குஆன்மீக சொற்பொழிவும் நடக்கிறது.

    2-வது நாளான நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு மங்கள இசையும், 5.15 மணிக்கு கலச பூஜையும், 8 மணிக்கு பஜனையும், 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அப்போது ஆஞ்சநேயருக்கு நல்லெண்ணெய், ஆயிரக்கணக்கான லிட்டர் பால் மற்றும் தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், எலுமிச்சை பழச்சாறு, கரும்புச்சாறு, மஞ்சள் பொடி, சந்தனம், குங்குமம், விபூதி, களபம், பன்னீர், நெய், பச்சரிசி மாவு, உள்பட 16 வகையான வாசனை திரவியங்கள் அடங்கிய சோடச அபிஷேகம் நடக்கிறது. 11.15 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது பகல் 11.30 மணிக்கு மகா அன்னதானம் நடக்கிறது. பின்னர் மாலை 5.30 மணிக்கு ஸ்ரீ ராம நாம சங்கீர்த்தனமும் 6.30 மணிக்கு தீபாராதனையும் நடக்கிறது. இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் நடக்கிறது.

    ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு, தட்டு வடை, குங்குமம், விபூதி, ஆப்பிள், ஆரஞ்சு போன்ற கனி வகைகளும் வழங்க கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துஉள்ளது. இதற்காக 5 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணி இன்றும் தொடர்ந்து நடக்கிறது.

    • 16 வகையான பொருட்கள் அடங்கிய சோடச அபிஷேகமும் நடைபெறுகிறது.
    • பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு, பஞ்சாமிர்தம், விபூதி, குங்குமம் ஆகியவற்றை வழங்குவதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகமும், பக்தர்களும் இணைந்து செய்து வருகிறார்கள்.

    நாகர்கோவில் :

    சுசீந்திரம் தாணுமாலய சாமிகோவிலில் 18 அடி உயர முள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சாமி சிலை உள்ளது.

    ஆஞ்சநேயருக்கு ஆண்டு தோறும் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தன்று ஜெயந்தி விழா நடை பெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண் டுக்கான ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி

    22-ந்தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கணபதிஹோமம், காலை 8 மணிக்கு நீலகண்ட விநாயகருக்கு அபிஷேகம், 10.30 மணிக்கு தாணுமாலய சாமிக்கு அபிஷேகம், 11.30 மணிக்கு உச்சிக்கால தீபாராதனை, மாலை 6 மணிக்கு கால பைரவருக்கு தீபாரா தனை நடக்கிறது.

    23-ந்தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவை யொட்டி அதிகாலை 5 மணிக்கு ராமபிரானுக்கு அபிஷேகமும், காலை 8 மணிக்கு 18 அடி உயரம் உள்ள விஸ்வரூப ஆஞ்ச நேயர் சுவாமிக்கு நல்லெண் ணெய், ஆயிரக்கணக்கான லிட்டர் பால் மற்றும் தயிர், களபம், சந்தனம், குங்குமம், விபூதி, மஞ்சள், அரிசி மாவு, பன்னீர், எலுமிச்சைபலசாறு, கரும்புச்சாறு, பஞ்சாமிர்தம், தேன், மாதுளைச் சாறு உள் பட 16 வகையான பொருட் கள் அடங்கிய சோடச அபி ஷேகமும் நடைபெறுகிறது.

    நண்பகல் 12 மணிக்கு அலங் காரதீபாராதனையும், மாலை 6 மணிக்கு ராமபி ரானுக்கு புஷ்பாபிஷேகமும், அதைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு ஆஞ்ச நேயர் சுவாமிக்கு புஷ் பாபிஷேகமும், 10 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. பக்தர்களுக்கு பிர சாதமாக லட்டு, பஞ்சாமிர் தம், விபூதி, குங்குமம் ஆகிய வற்றை வழங்குவதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகமும், பக்தர்களும் இணைந்து செய்து வருகி றார்கள்.

    ×