search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியர் பணி நியமன முறைகேடு"

    • ஆசிரியர் நியமன மோசடி தொடர்பாக மேலும் ஒரு திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிக்கி உள்ளார்.
    • ஆசிரியர் முறைகேடு தொடர்பாக மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த 2 எம்.எல்.ஏக்கள் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தில் ஆசிரியர் பணி நியமன முறைகேடு பூதாகரமாக வெடித்து உள்ளது. கடந்த 20 14-ம் ஆண்டு அங்குள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் செய்ததில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இச்சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடந்தது. இதில் சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக அமலாக்கபிரிவு அதிகாரிகள் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    இதையடுத்து முறைகேடு நடந்த காலகட்டத்தில் கல்வி மந்திரியாக இருந்தவரும் தற்போது ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் வணிகம் மற்றும் தொழில் துறை மந்திரியாக பதவி வகித்தவருமான பார்த்தா சட்டர்ஜி கைது செய்யப்பட்டார். மேலும் அவரது உதவியாளரும், நடிகையுமான அப்ரிதா முகர்ஜி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கட்டுக்கட்டாக ரூ 50 கோடி ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது. கிலோ கணக்கில் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அப்ரிதா முகர்ஜியையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

    இந்த நிலையில் ஆசிரியர் நியமன மோசடி தொடர்பாக மேலும் ஒரு திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ சிக்கி உள்ளார். அவரது பெயர் மாணிக் பட்டாசார்யா. இவர் தொடக்க கல்வி வாரிய முன்னாள் தலைவர் ஆவார். இவருக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்க துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

    அதன்படி நேற்று அமலாக்க பிரிவு அலுவலகத்தில் மாணிக் பட்டாச்சாரியா ஆஜரானார். அவரிடம் விடிய விடிய அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். முறைகேடு குறித்து பல்வேறு கேள்விகளை அவரிடம் கேட்டனர். விசாரணை முடிவில் மாணிக் பட்டா சார்யா கைது செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதைதொடர்ந்து அவர் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். ஆசிரியர் முறைகேடு தொடர்பாக மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த 2 எம்.எல்.ஏக்கள் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளனர். இது அம்மாநில முதல்-மந்திரியும் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கில் மேற்கு வங்காள மந்திரி பார்த்தா சட்டர்ஜி கைது செய்யப்பட்டுள்ளார்.
    • மந்திரியின் உதவியாளரான நடிகையின் வீட்டில் ரூ.50 கோடி அளவுக்கு கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டது

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநில வணிகம் மற்றும் தொழில் துறை மந்திரியாக இருக்கும் பார்த்தா சட்டர்ஜி கடந்த 2014-ம் ஆண்டு வரை கல்வித்துறை மந்திரியாக செயல்பட்டார். அப்போது அவர் ஆசிரியர் பணி நியமன முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டு எழுந்ததால் அமலாக்கத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது. பார்த்தா சட்டர்ஜி, அவரது உதவியாளரும் நடிகையுமான அர்பிதா முகர்ஜி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கடந்த 22-ந்தேதி மந்திரி பார்த்தா சட்டர்ஜி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அர்பிதா முகர்ஜி வீட்டிலும் அடுத்தடுத்து சோதனை நடத்தினர். அர்பிதாவின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் 50 கோடி ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 6 கிலோவுக்கு அதிகமான தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அர்பிதா முகர்ஜி வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணமும், கிலோ கணக்கில் தங்கமும் கைப்பற்றப்பட்டது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் அமலாக்கத்துறையினர் அர்பிதா முகர்ஜி கைது செய்யப்பட்ட நாளில் இருந்து, கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் இருந்த 4 கார்களைக் காணவில்லை. இவ்வழக்கு தொடர்புடைய மேலும் கோடிக்கணக்கான பணம் அந்த கார்களில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆடி ஏ4, ஹோண்டா சிட்டி, ஹோண்டா சிஆர்வி மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஆகிய கார்களை அமலாக்கத்துறையினர் தேடி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. அர்பிதா முகர்ஜி கைது செய்யப்பட்டபோது, ​​ஒரு வெள்ளை நிற மெர்சிடிஸ் காரை மட்டும் அமலாக்கத்துறை கைப்பற்றியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    காணாமல் போன கார்களை தேடும் பணி நடைபெறுகிறது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும், பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தியும் அந்த கார்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    ஆசிரியர் பணி நியமன முறைகேடு வழக்கில் சிக்கிய அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை பதவியில் இருந்தும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பார்த்தா சாட்டர்ஜி, அர்பிதா முகர்ஜி ஆகிய இருவரையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்கள் காவலில் வைத்து விசாரணை நடத்திவருகின்றனர். ஆகஸ்ட் 3ம் தேதி வரை அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

    • 2016-ம் ஆண்டு பெங்காலி நடிகர் மூலம் மந்திரி பார்த்தா சட்டர்ஜி எனக்கு அறிமுகமானார்.
    • எனது வீட்டையும், இன்னொரு பெண்ணின் வீட்டையும் மந்திரி பார்த்தா சட்டர்ஜி மினி வங்கி போல பயன்படுத்தி வந்தார்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநில வணிகம் மற்றும் தொழில் துறை மந்திரியாக இருக்கும் பார்த்தா சட்டர்ஜி கடந்த 2014-ம் ஆண்டு வரை கல்வித்துறை மந்திரியாக செயல்பட்டார்.

    அப்போது அவர் ஆசிரியர் பணி நியமன முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் குற்றச்சாட்டு எழுந்ததால் அமலாக்கத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகிறது.

    கடந்த 22-ந்தேதி மந்திரி பார்த்தா சட்டர்ஜி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அதேபோல் தெற்கு கொல்கத்தாவில் அவரது உதவியாளரும், நடிகையுமான அர்பிதா முகர்ஜி வீட்டிலும் சோதனை நடத்தினர்.

    அங்கு ரூ.2 ஆயிரம், ரூ.500 என ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக மலைபோல குவிந்து கிடந்தது. அர்பிதா முகர்ஜி வீட்டில் ரூ.20 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதற்கிடையே மந்திரி பார்த்தா சட்டர்ஜி மற்றும் அர்பிதா முகர்ஜியை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது.

    இதையடுத்து கொல்கத்தா அமலாக்கத்துறை அலுவலகத்தில் மந்திரி பார்த்தா சட்டர்ஜி, அர்பிதா முகர்ஜி ஆகியோரிடம் நேற்று முன் தினம் விசாரணையை தொடங்கினர்.

    இந்த சிலையில் நடிகை அர்பிதா முகர்ஜியின் இன்னொரு வீட்டில் நேற்று அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். கொல்கத்தாவில் பெல்காரியா பகுதியில் உள்ள அர்பிதா முகர்ஜிக்கு சொந்தமான வீட்டை அதிகாரிகள் திறந்து ஒவ்வொரு அறையாக சோதனை செய்தனர்.

    அங்கும் கட்டுக்கட்டாக பணம் குவிந்து கிடந்தது. ஏற்கனவே ரூ.20 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வீட்டில் இருந்தது போலவே இந்த வீட்டிலும் 2000, 500 ரூபாய் நோட்டுகள் குவித்து வைக்கப்பட்டு இருந்தது. மேலும் தங்க கட்டிகளும் இந்தது.

    இதையடுத்து பணம் எண்ணும் எந்திரங்களை எடுத்து வருமாறு வங்கி அதிகாரிகளை கேட்டுக்கொண்டனர். பின்னர் வீட்டில் இருந்த பணத்தை எண்ணும் பணி தொடங்கியது. இப்பணி விடிய விடிய நடந்தது.

    இதில் சுமார் ரூ.29 கோடி இருப்பது தெரிய வந்தது. இந்த பணத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் 5 கிலோ தங்க நகைகளும் சிக்கியது.

    சுமார் 18 மணிநேரம் நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ரூ.29 கோடி பணம் 10 பெட்டிகளில் வைக்கப்பட்டன. அந்த பெட்டிகளுடன் இன்று அதிகாலை அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.

    தங்க நகைகளும் முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டது. ஏற்கனவே நடந்த சோதனையில் ரூ.21 கோடி சிக்கியபோது அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் தற்போது மேலும் ரூ.29 கோடி பணம் குவிக்கப்பட்டு இருப்பதை கண்டு திகைத்துவிட்டனர்.

    அர்பிதா முகர்ஜியின் இரண்டு வீட்டில் இருந்தும் ரூ.50 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் அர்பிதா முகர்ஜி வீட்டில் நடந்த சோதனையில் டைரி ஒன்று சிக்கியது. அதில் முக்கிய தகவல்கள் உள்ளது என்றும் அதன் மூலம் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப் படுகிறது.

    இதற்கிடையே அமலாக்கத்துறை விசாரணையில் நடிகை அர்பிதா முகர்ஜி பல்வேறு தகவல்களை தெரிவித்தார். அவர் அதிகாரிகளிடம் கூறியதாவது:-

    2016-ம் ஆண்டு பெங்காலி நடிகர் மூலம் மந்திரி பார்த்தா சட்டர்ஜி எனக்கு அறிமுகமானார். எனது வீட்டிலுள்ள அறையில் அவர் பணத்தை பதுக்கி வைத்து இருந்தார். இது அவர் வாங்கிய லஞ்ச பணமாக இருக்கலாம். அவர் நேரடியாக அந்த பணத்தை வாங்கவில்லை. உதவியாளர்கள் மூலம் அந்த பணத்தை அவர் பெற்றார் என கருதுகிறேன்.

    சட்ட விரோதமாக பெறப்பட்ட பணத்தை அவர் எனது வீட்டில் வைத்து இருந்தார். அந்த அறையில் எவ்வளவு பணம் இருந்தது என்று எனக்கு தெரியாது. வாரத்துக்கு ஒரு முறை அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறை அவர் எனது வீட்டுக்கு வருவார்.

    அவருக்கு நெருக்கமான பெண் ஒருவரும் வருவார். மேலும் மந்திரிக்கு நெருக்கமானவர்களும் வருவார்கள். அந்த அறையில் என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியாது எனது வீட்டையும், இன்னொரு பெண்ணின் வீட்டையும் மந்திரி பார்த்தா சட்டர்ஜி மினி வங்கி போல பயன்படுத்தி வந்தார்.

    பணத்தை எப்போதும் மற்றவர்கள் தான் கொண்டு வருவார்கள். அந்த அறைகளில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பது குறித்து மந்திரி ஒரு போதும் என்னிடம் கூறியது இல்லை.

    இவ்வாறு அர்பிதா முகர்ஜி வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக தெரிகிறது.

    ×