search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறக்கட்டளை"

    • ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் உள்ள திருவாடானை பஞ்சாயத்து யூனியன் மேற்கு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியை சாந்தி முருகானந்தம் தலைமையில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது.
    • அறக்கட்டளையின் தலைவர் பாலா, செயலாளர் குணா ஜோதிலிங்கம் ஆகியோர்சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். தலைமை ஸ்டெல்லா மேரி நன்றி கூறினார்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் உள்ள திருவாடானை பஞ்சாயத்து யூனியன் மேற்கு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியை சாந்தி முருகானந்தம் தலைமையில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது. கிழக்கு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் லியோ ஜெரால்டு எமர்சன் தலைமையில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    தொண்டி அருகே உள்ள திருவெற்றியூரில் நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக புனித நார்ப்பட் மேல்நிலைப்பள்ளியில் 650 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். வேல்டு விசன் இந்தியா தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சந்திரன், எபினேசர் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளையின் தலைவர் பாலா, செயலாளர் குணா ஜோதிலிங்கம் ஆகியோர்சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். தலைமை ஸ்டெல்லா மேரி நன்றி கூறினார்.

    • சித்தி விநாயகர் அறக்கட்டளை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாமில், 250 பேருக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • மாணவ -மாணவியர்கள், சுற்றுச்சூ–ழலை பேணி பாதுகாக்க மரக்கன்றுகள் நடுவதில் ஆர்வம் காட்ட வேண்டும்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சோமம்பட்டியில் பேள்நாடு ஸ்ரீ சித்தி விநாயகர் அறக்கட்டளை சார்பில், இலவச கண் சிகிச்சை முகாம், மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவியருக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது.

    சோமம்பட்டி ஊராட்சி கிராம சேவை மைய வளாகத்தில் சேலம் அரவிந்த் கண் மருத்துவமனை, ஐ பாயிண்ட் ஆப்டிக் நிறுவனத்துடன் சித்தி விநாயகர் அறக்கட்டளை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாமில், 250 பேருக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது. கண் புரை அறுவை சிகிச்சைக்கு 50 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

    இதனையடுத்து சோமம்பட்டிஏரியில்– நடைபெற்ற மரக்கன்றுகள் நடும்விழாவில், அறக்கட்டளை தன்னார்வ–லர்கள், பொதுமக்கள், மாணவர்கள்இணைந்து, பலன் தரும் 50 மரக்கன்று–களை நட்டனர்.சித்தி விநாயகர் அறக்கட்டளை தலைவர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார்.

    சோமம்பட்டி கிராம சேவை மையத்தில் நடைபெற்ற, அதிக மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி மாணவ- மாணவிக்கு பரிசு வழங்கும் விழாவிற்கு, சேலம் மாவட்ட கல்வி அலுவலர் உதயக்குமார், சோமம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியம், ஊராட்சி செயலர் மகேஸ்வரன், சாய்பாபா அறக்கட்டளை தலைவர் ஜவஹர், சேலம் வக்கீல் வேல்மணி ஆகியோர் மாணவ - மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ் பரிசு வழங்கி பாராட்டினர்.

    விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் பேசுகையில், கிராமப்புற மாணவர்கள் கல்வியில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். ஏழ்மையான நிலையில் படித்து பட்டம் பெறும் பலர் உயர்ந்த நிலையை அடைந்து விடுகின்றனர். இதற்கு நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை சிறந்த உதாரணமாக கொள்ளலாம். மாணவ -மாணவியர்கள், சுற்றுச்சூ–ழலை பேணி பாதுகாக்க மரக்கன்றுகள் நடுவதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றார்.நிறைவாக சித்தி விநாயகர் அறக்கட்டளை செயலர் ரமேஷ்குமார் நன்றி கூறினார்.

    • மதுரையில் 10 ஆயிரம் பேருக்கு கண் பார்வை கிடைத்துள்ளது என டிரஸ்டி சவுமியா விஜயகுமார் தகவல் தெரிவித்துள்ளார்.
    • குடும்ப பிரச்சினை, வாழ்க்கையில் விரக்தியடைந்த பெண்களுக்கு பிரம்மகுமாரிகள் அமைப்புடன் இணைந்து இலவசமாக கவுன்சிலிங்கும் வழங்கப்பட்டு வருகிறது.

    மதுரை

    மதுரை விளாங்குடி பகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் மகன் நினைவாக தொடங்கப்பட்ட ஆர்.ஜெ.தமிழ்மணி அறக்கட்டளை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது.

    இந்த மருத்துவ முகாமில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் அறக்கட்டளை தலைவர் ஜெயந்தி ராஜூ, டிரஸ்டிகள் சவுமியா விஜயகுமார், கணேஷ்பிரபு, ரம்யா ஆகியோர் பங்கேற்றனர். அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்து டிரஸ்டி சவுமியா விஜயகுமார் கூறியதாவது:-

    எனது சகோதரன் ஆர்.ஜெ. தமிழ்மணி நினைவாக கடந்த 2014-ம் ஆண்டு முதல் அறக்கட்டளை தொடங்கப்பட்டு மதுரையில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ முகாம்கள், நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறோம். 27-வது பொது மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த முகாம்களில் அரவிந்த் கண் மருத்துவமனை, பிரீத்தி மருத்துவமனை, ராதா பல் மருத்துவமனைகளை சேர்ந்த சிறந்த மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து அதில் பாதிப்பு உள்ளவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    குறிப்பாக கண் பார்வை தொடர்பான அறுவை சிகிச்சைகள், கண் கண்ணாடிகள் மற்றும் பல் தொடர்பான பிரச்சினைகள், முடநீக்கியல், காது-மூக்கு-தொண்டை சிகிச்சைகள், எலும்பு தொடர்பான சிகிச்சைகள் அனைத்தும் அறக்கட்டளை சார்பில் இலவசமாக செய்து தரப்படுகிறது.

    இந்த மருத்துவ முகாம்கள் மூலம் 10 ஆயிரம் பேர் கண் பார்வை பெற்றுள்ளனர். 1000 பேருக்கு அறுவை சிகிச்சைகளின் மூலம் பார்வை கிடைத்துள்ளது. 3 ஆயிரம் பேருக்கு கண் கண்ணாடிகளை வழங்கியுள்ளோம்.

    மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கிராமப்புற ஏழை, எளிய மக்கள் பயனடையும் வகையில் இந்த முகாம் தொடர்ந்து நடத்தப்படும்.

    மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஏழைகள் அனைவருக்கும் உரிய மருத்துவ வசதிகளை செய்து முடித்தவுடன் மற்ற பகுதிகளிலும் அறக்கட்டளை சார்பில் மருத்துவ முகாம்களை நடத்த உள்ளோம்.

    மேலும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கம்ப்யூட்டர், தையல், எம்பிராய்டரி ஆகிய மூன்று மாத இலவச பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்த பயிற்சியின் மூலம் 1,200 பெண்கள் பயனடைந்துள்ளனர். மேலும் குடும்ப பிரச்சினை, வாழ்க்கையில் விரக்தியடைந்த பெண்களுக்கு பிரம்மகுமாரிகள் அமைப்புடன் இணைந்து இலவசமாக கவுன்சிலிங்கும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கவுன்சிலிங்கில் ஏராளமான பெண்கள் பங்கேற்று பயன் அடைந்துள்ளனர்.

    இவ்வாறு சவுமியா விஜயகுமார் கூறினார்.

    ×