search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Siddhi Ganesha Foundation"

    • சித்தி விநாயகர் அறக்கட்டளை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாமில், 250 பேருக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • மாணவ -மாணவியர்கள், சுற்றுச்சூ–ழலை பேணி பாதுகாக்க மரக்கன்றுகள் நடுவதில் ஆர்வம் காட்ட வேண்டும்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சோமம்பட்டியில் பேள்நாடு ஸ்ரீ சித்தி விநாயகர் அறக்கட்டளை சார்பில், இலவச கண் சிகிச்சை முகாம், மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவியருக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது.

    சோமம்பட்டி ஊராட்சி கிராம சேவை மைய வளாகத்தில் சேலம் அரவிந்த் கண் மருத்துவமனை, ஐ பாயிண்ட் ஆப்டிக் நிறுவனத்துடன் சித்தி விநாயகர் அறக்கட்டளை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாமில், 250 பேருக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது. கண் புரை அறுவை சிகிச்சைக்கு 50 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

    இதனையடுத்து சோமம்பட்டிஏரியில்– நடைபெற்ற மரக்கன்றுகள் நடும்விழாவில், அறக்கட்டளை தன்னார்வ–லர்கள், பொதுமக்கள், மாணவர்கள்இணைந்து, பலன் தரும் 50 மரக்கன்று–களை நட்டனர்.சித்தி விநாயகர் அறக்கட்டளை தலைவர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார்.

    சோமம்பட்டி கிராம சேவை மையத்தில் நடைபெற்ற, அதிக மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி மாணவ- மாணவிக்கு பரிசு வழங்கும் விழாவிற்கு, சேலம் மாவட்ட கல்வி அலுவலர் உதயக்குமார், சோமம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியம், ஊராட்சி செயலர் மகேஸ்வரன், சாய்பாபா அறக்கட்டளை தலைவர் ஜவஹர், சேலம் வக்கீல் வேல்மணி ஆகியோர் மாணவ - மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ் பரிசு வழங்கி பாராட்டினர்.

    விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் பேசுகையில், கிராமப்புற மாணவர்கள் கல்வியில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். ஏழ்மையான நிலையில் படித்து பட்டம் பெறும் பலர் உயர்ந்த நிலையை அடைந்து விடுகின்றனர். இதற்கு நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை சிறந்த உதாரணமாக கொள்ளலாம். மாணவ -மாணவியர்கள், சுற்றுச்சூ–ழலை பேணி பாதுகாக்க மரக்கன்றுகள் நடுவதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றார்.நிறைவாக சித்தி விநாயகர் அறக்கட்டளை செயலர் ரமேஷ்குமார் நன்றி கூறினார்.

    ×