search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு தோட்டக்கலை பண்ணை"

    • வன்னிக்கோனேந்தல் கிராமத்தில் அரசு தோட்டக்கலைப் பண்ணை அமைந்துள்ளது.
    • பண்ணை மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் லாபம் கிடைக்கிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம், மானூர் வட்டாரம் வன்னிக்கோனேந்தல் கிராமத்தில் 9.86 ஹெக்டேர் பரப்பில் அரசு தோட்டக்கலைப் பண்ணை அமைந்துள்ளது.

    இப்பண்ணையில் ஆண்டுக்கு சுமார் 55 லட்சம் வீரிய ஒட்டு ரக குழித்தட்டு காய்கறி நாற்றுகள், சுமார் 3 லட்சம் மா, நெல்லி, சப்போட்டா ஒட்டுக்கன்றுகள், கொய்யா பதியன்கள் மற்றும் இதர தோட்டக்கலை நடவுச்செடிகள் உற்பத்தி செய்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற மாவட்டங்களுக்கு தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்களுக்கும், அனைத்து தர விவசாயிகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.1.5 கோடி முதல் ரூ.2 கோடி வரை வருமானம் ஈட்டப்பட்டு வருகிறது.

    இதன் மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் குறைந்த பட்சம் ரூ.50 லட்சம் லாபம் கிடைக்கப் பெற்று வருகிறது. இப்பண்ணையை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் நேரில் ஆய்வு செய்தார்.

    இங்கு உற்பத்தி செய்யப்படு கிற மா ஒட்டுக்கன்றுகள், கொய்யா பதியன்கள், சப்போட்டா ஒட்டுக்கன்றுகள், எலுமிச்சை வேர் பிடித்த குச்சிகள் மற்றும் இதர பழச்செடி கள் மற்றும் கன்றுகள் உற்பத்தி செய்யப்படும் முறைகளை கேட்டறிந்தார்.

    மேலும் மாவட்டத்தில் நெல்லி, மா, எலுமிச்சை போன்ற பல்லாண்டு பயிர்களை அதிகளவில் உற்பத்தி செய்து அதனை மாவட்டத்தில் உள்ள அதிகளவிலான விவசாயி களுக்கு திட்டங்கள் மூலம் வழங்குவதற்கு அறிவுரை வழங்கினார்.

    ஆய்வின்போது தோட்ட க்கலை துணை இயக்குநர் பாலகிருஷ்ணன், உதவி இயக்குநர் இளங்கோ மற்றும் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

    ×