search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி"

    • கோவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்தார்.
    • குட்கா மீது தடை விதிக்க மேல்முறையிடும் செய்யப்பட்டுள்ளது.

    கோவை

    கோவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் விழா கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் உள்ள அரங்கத்தில் நடந்தது.

    இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிர மணியன் கலந்து கொண்டு 100 மாணவ- மாணவி களுக்கு வெள்ளை அங்கியி னை அணிவித்தார். பின்னர் மா. சுப்பிரமணியன் நிருபர்க ளுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கோவையில் மருத்துவ துறையில் புதிய கட்டமைப்புகள் அதிக அளவில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் ஆஸ்பத்திரிகளுக்கு அதிகளவு நான் வந்துள்ளேன். ஒரு மாதத்திற்கு ஒன்று இரண்டு முறை என இதுவரை 20-க்கும் மேற்பட்ட முறை கோவை வந்துள்ளேன்.

    முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி சென்றபோது அங்குள்ள ஆம் ஆத்மி ஆஸ்பத்திரியை பார்வையிட்டார். அந்த ஆஸ்பத்திரியின் கட்டமைப்பை பார்த்து தமிழகத்திலும் ஏழை எளிய மக்கள் பயன் அடைய வேண்டும் என முடிவு செய்தார்.

    இதையடுத்து தமிழக முழுவதும் 708 ஆஸ்பத்திரிகளை கட்ட உத்தரவிட்டார். அதில் ஒரு டாக்டர், ஒரு நர்ஸ், ஒரு மருந்து ஆளுநர், ஒரு உதவியாளரை நிய மித்துள்ளார். தமிழகத்தி லேயே கோவை மாவட்டத்திற்கு 72 ஆஸ்பத்திரிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் மாநகராட்சிக்கு 64 ஆஸ்பத்திரிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

    அந்த 708 ஆஸ்பத்தி ரிகளில் பெரும்பாலான கட்டிடப் பணிகள் முடிவடைந்துவிட்டது. ஒரு சில ஆஸ்பத்திரிகள் மட்டும் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. அதுவும் விரைவில் நிறைவடைய உள்ளது. மருத்துவத்துறை வரலாற்றில் தமிழகத்தில் முதல் முறையாக 500-க்கும் மேற்பட்ட ஆஸ்பத்திரிகளை முதல்-அமைச்சர் பிப்ரவரி 6-ந் தேதி திறந்து வைக்க உள்ளார். இது தவிர மணியக் காரம்பாளையத்தில் ஒரு சுகாதார நிலையம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் கடந்த ஆண்டுகளில் 400 புற நோயாளிகள் வந்து கொண்டிருந்தனர். தற்போது அது 1200 ஆக உயர்ந்துள்ளது. அரசு ஆஸ்பத்திரியில் 4000 ஆக உயர்ந்துள்ளது. இன்னுயிர் காப்போம் நம்மை காப்போம் திட்டத்தில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு ரூ .56 லட்சம் உபகரணங்கள் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் 500 இடங்கள் விபத்துக்கள் ஏற்படும் ஆபத்தான இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த பகுதிகளுக்கு உட்பட்ட 679 ஆஸ்பத்திரியில் அரசு சார்பில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் விபத்து ஏற்பட்டு 48 மணி நேரத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ரூ. ஒரு லட்சம் வழங்கப்படும். விபத்து ஏற்பட்ட வரை ஆஸ்பத்திரியில் அனுமதிப்பவருக்கு ரூ.5,000 ஊக்க தொகையும் வழங்கப்படுகிறது. அதன்படி ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 923 பேர் விபத்தில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்காக ரூ.125 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

    வருகிற 2-ந் தேதி தமிழக முதல் அமைச்சர் 787 பணியிடங்களுக்கு பணி நியமன ஆணையை வழங்க உள்ளார். தமிழகம் காச நோயாளிகள் இல்லாத மாநிலமாக உருவாக்கப்படும்.

    குட்கா மீதான தடையை கோர்ட்டு நீக்கி உள்ளது ஆனால் தமிழக அரசு போதை பொருட்களை தமிழகத்தில் இருந்து முழுமையாக ஒழிப்பதிலேயே குறிக்கோளாக உள்ளது. இதனால் வியாபாரிகள் கடைகளில் குட்காவை விற்க வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறேன். குட்கா மீது தடை விதிக்க மேல்முறையிடும் செய்யப்பட்டுள்ளது. வேண்டுமானால் தமிழக சட்டசபையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  

    கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரியை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரியில் நாளை முதல் நிரந்தர 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்படும்.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரியை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:- 

    கன்னியாகுமரி மருத்துவமனை என்பது மிகப்பெரிய அளவில் அவசியத் தேவைகளில் ஒன்றாகும். வெளி மாநிலங்கள்  மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் கன்னியாகுமரிக்கு சுற்றுலாவுக்காக ஏராளமானோர் வருகிறார்கள்.

    இந்த ஆஸ்பத்திரியை தரம் உயர்த்த வேண்டும் என்பது அவசியமான ஒன்றாகும். தினமும் 300, 350 பேர் புற நோயாளிகளாக வந்து சிகிச்சை பெறுகிறார்கள். மாதம் ஒன்றுக்கு 15 முதல் 20 பிரசவங்களும் நடக்கிறது. 

    இந்த மருத்துவமனையில் பிரேத பரிசோதனை கூடம் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இங்குள்ள பிரேத பரிசோதனை கூடத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க ப்படும்.108 ஆம்புலன்ஸ் சேவை வேண்டும் என்று கேட்டனர். இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு நாளை முதல் நிரந்தர 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்படும்.
     
    இந்த மருத்துவமனைக்கு பொதுமக்கள் வரும் போது போதிய இருக்கை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மருத்துவத்துறையை  மேம்படுத்த பல்வேறு கட்டமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    கன்னியாகுமரியை பொறுத்தவரை நெய்யூர் பேரூராட்சி மேக்கோடு கிராமத்தில் ரூ.20 லட்சம் செலவில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம் ஒன்று மிக விரைவில் முதல்-அமைச்சரால் திறக்கப்படும். 

    இதேபோல் விளவங்கோடு ஊராட்சிக்குட்பட்ட ஈத்தவிளை கிராமத்தில், ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் துைண சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளது.அதுவும் விரைவில் முதல்-அமைச்சரால் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட உள்ளது.

    கடந்த நிதிநிலை அறிக்கையின் போது  குமரி மாவட்டத்திற்கு மக்கள் பிரதிநிதிகள் வைத்த கோரிக்கையை ஏற்று பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப் பட்டது. குமரி மாவட்டத்தில் ஏற்படுகின்ற விபத்து மற்றும் சிகிச்சை மையங்களில் விபத்து பதிவு தொடர்பான விவரங்களை பதிவு செய்ய புதிய சாப்ட்வேர் ரூ. 5 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட உள்ளது.

    குமரி மாவட்டத்திலுள்ள குருந்தன்கோடு, இடைக்கோடு,   சி.ஆர்.புதூர், அகஸ்தீஸ்வரம் கோதனல்லூர் ஆகிய வட்டார அளவிலான பொது சுகாதார நிலைய ங்களில் புதிய கட்டடங்கள் ரூ 40 கோடியே 4 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ளது. 

    ஊரக பகுதிகளில் வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டு வரும் 8  துணை  சுகாதார நிலையங்களுக்கு பதிலாக அரசு சார்பில் புதிய சுகாதார நிலையங்கள்  கட்டுவதற்கு ரூ. 2 கோடியே 59 லட்சம் மதிப்பீட்டில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. 

    குமரி மாவட்டத்தில் ஆறு தேசம், கணபதிபுரம், மற்றும் பளுகல் ஊரக பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்களை மாற்றி புதிய கட்டடங்கள் கட்ட ரூ. 2 கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில்  கட்ட திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது. 

    இங்கு உள்ள மருத்துவ காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். வடிவீஸ்வரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு  புதிய கட்டி டங்கள் கட்ட ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பில் திட்ட மதிப்பு தயாரிக்கப்பட்டு உள்ளது. 
    நாகர்கோவில் மாநகராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் நவீன உபகரணங்கள் கூடிய சுகாதார ஆய்வக கட்டடங்கள் ரூ. 49 லட்சத்து 76 ஆயிரம் செலவில் கட்டப்பட உள்ளது. 

    ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் புற்றுநோய் சிகிச்சை மையத்தில் கருவிகள் வாங்க ரூ.14 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

    நிகழ்ச்சியில் அமைச்சர் மனோதங்கராஜ், மேயர் மகேஷ், முனனாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், தாமரை பாரதி, குமரி ஸ்டீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×