search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்க டாலர் பறிமுதல்"

    சென்னை விமான நிலையத்தில் குங்குமப்பூ, தங்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் இலங்கை பயணியிடம் இருந்து ரூ.15 லட்சம் அமெரிக்க டாலரையும் பறிமுதல் செய்தனர். #ChennaiAirport
    ஆலந்தூர்:

    துபாயில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்தவர்களின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது சென்னையை சேர்ந்த 3 பேர் உரிய ஆவணங்கள் இன்றி 8 லேப்டாப், குங்குமப்பூ, வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் ஆகியவற்றை கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.

    சோதனையின்போது ஒரு வாலிபர் தனது உடலில் 50 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்திருந்தார். அனைத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும்.

    இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த 3 வாலிபர்களிடமும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்க்ள.



    சென்னையில் இருந்து இலங்கைக்கு இன்று காலை பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் செல்ல வந்த இலங்கையை சேர்ந்த வாலிபரின் நடத்தையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    அவரது பையை சோதனை செய்தபோது ரூ.15 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் இருந்தன. இதற்கான ஆவணம் அவரிடம் இல்லை. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #ChennaiAirPort
    சென்னையில் இருந்து இலங்கைக்கு செல்ல இருந்த விமானத்தில் கடத்த முயன்ற ரூ.12 லட்சம் அமெரிக்க டாலரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து இலங்கைக்கு நேற்று இரவு பயணிகள் விமானம் செல்ல தயாராக இருந்தது. அதில் செல்ல வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

    அப்போது இலங்கையை சேர்ந்த சுரேந்திரன், ராஜ்குமார் ஆகியோரது சூட்கேசில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் இருந்தது. இதற்கான ஆவணம் அவர்களிடம் இல்லை.

    இதையடுத்து அமெரிக்க டாலர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சுரேந்திரன், ராஜ்குமாரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த சென்னையை சேர்ந்த முகமது ஆரிப்பின் சூட்கேசை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

    அப்போது அவர் சூட்கேசில் ரகசிய அறை அமைத்து 1 கிலோ 200 கிராம் தங்க கட்டி கடத்தி வந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து தங்ககட்டியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    முகமது ஆரிப் முதலில் துபாயில் இருந்து அகமதாபாத்துக்கு விமானத்தில் வந்து இருக்கிறார். பின்னர் அங்கிருந்து இந்தூர் சென்று சென்னைக்கு வந்திருப்பது விசாரணையில் தெரிந்தது. #tamilnews
    சென்னை விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ரூ.60 லட்சம் அமெரிக்க டாலர் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ஆலந்தூர்:

    இன்று காலை சென்னையில் இருந்து துபாய் வழியாக அமெரிக்கா செல்லும் பயணிகள் விமானம் புறப்பட தயாரானது. அதில் பயணம் செய்யும் பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

    அப்போது, வெளிநாட்டில் வாழும் இந்திய வம்சா வழி பயணி ஒருவர் ரூ.60 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை மறைத்து வைத்திருப்பது தெரிய வந்தது. இதற்குரிய முறையான ஆவணங்கள் அவரிடம் இல்லை.

    எனவே அந்த அமெரிக்க டாலர் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது குறித்து விசாரணை நடைபெறுகிறது. #tamilnews
    ×