search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்க அரசியல் ஆலோசகர்"

    • உலகில் உள்ள அனைத்து தேர்தல்களிலும் மிகப்பெரிய ஜனநாயகத்தை கொண்ட இந்தியா சுமூகமான மாற்றத்தை கொண்டுள்ளது.
    • 2030-ல் இந்தியா உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறும்.

    மும்பை:

    இந்தியாவில் நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 305 இடங்களில் வெற்றி பெறும் என்று அமெரிக்காவை சேர்ந்த அரசியல் ஆலோசகரும், 'ரிஸ்க் மற்றும் ரிசர்ச் கன்சல்டிங்' நிறுவனமான யூரேசியா குழுமத்தின் நிறுவனரான இயான் ஆர்தர் பிரம்மர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலை நியாயமாகவும், வெளிப்படை தன்மையுடனும் இந்திய தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க. சுமார் 305 இடங்களில் வெற்றி பெறும்.

    இந்த எண்ணிக்கையில் 10 தொகுதிகள் முன் பின்னாக வெற்றி அமையலாம் என்று எங்களது யூரேசியா குழு தெரிவிக்கிறது. அதாவது பா.ஜ.க. வெற்றி எண்ணிக்கை 295 முதல் 315 தொகுதிகள் வரை இருக்கும்.

    உலகில் உள்ள அனைத்து தேர்தல்களிலும் மிகப்பெரிய ஜனநாயகத்தை கொண்ட இந்தியா சுமூகமான மாற்றத்தை கொண்டுள்ளது. அதன் சுதந்திரமான, நியாயமான மற்றும் வெளிப்படையான இந்திய தேர்தல் செயல்முறை பாராட்டுக்குரியது.

    இந்தியா மிகப்பெரிய ஜனநாயகத்தை கொண்ட நாடு. ஜப்பான், இந்தியாவுடன் வலுவான நட்புறவு வைத்துள்ளது. உலக நாடுகள் இந்தியாவை நெருங்கி வருகின்றன.

    பிரதமர் மோடியின் நிலையான சீர்திருத்தத்தின் பின்னணி, வலுவான பொருளாதார திறன் ஆகியவற்றால் 3-வது முறையாக மோடி வெற்றி பெற போகிறார். 2030-ல் இந்தியா உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×