search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமராவதி ஆறு"

    • தென் மேற்கு பருவ மழை காலத்தில், அமராவதி அணை நிரம்பியுள்ளது.
    • மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    மடத்துக்குளம்:

    உடுமலை அருகே உள்ள அமராவதி அணை வாயிலாக திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 54, 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் ஆற்றின் வழியோர கிராமங்களின் குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் மட்ட ஆதாரமாகவும் உள்ளது. மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதியில் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான கேரள மாநிலம், மூணாறு, தலையாறு, மறையூர் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.இதனால் அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. கடந்த ஒரு வாரத்தில் அணை நீர்மட்டம் 15 அடி வரை உயர்ந்தது.கடந்த 14ந் தேதி, முழு கொள்ளளவை எட்டும் நிலையில் ஆற்றின் வழியோரத்திலுள்ள இரு மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. 15-ந் தேதி, காலை 8 மணி முதல் உபரி நீர், பிரதான மதகு வழியாக ஆற்றிலும், பிரதான கால்வாயிலும் திறக்கப்பட்டு வருகிறது.

    ஜூன் முதல் மே வரையிலான நீர் ஆண்டில், முதல் முறையாக தென் மேற்கு பருவ மழை காலத்தில், அமராவதி அணை நிரம்பியுள்ளது. கடந்தாண்டு அணை நிரம்பிய போது உச்ச அளவாக வினாடிக்கு, 10 ஆயிரம் கனஅடி வெளியேற்றப்பட்டது.ஆனால், நடப்பாண்டு உச்ச அளவாக 12 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணை நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, அணை பாதுகாப்பு கருதி உபரியாக வெளியேற்றப்படுகிறது.இவ்வாறு கடந்த 4 நாட்களாக அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் நிலையில்நீர்வரத்தும், வெளியேற்றமும் குறைந்துள்ளது.

    தற்போதைய நிலவரப்படி, அணை நீர்மட்டம் மொத்தமுள்ள 90 அடியில் 88 அடியாகவும், நீர்இருப்பு மொத்த கொள்ளளவான 4,047 மில்லியன் கனஅடியில், 3,903.98 மில்லியன் கனஅடியாகவும் உள்ளது.

    அணையிலிருந்து வினாடிக்கு 6,500 கனஅடிக்கு குறைவாக 24 மணி நேரமும் நீர் திறக்கப்பட்டால், வெள்ள அபாய எச்சரிக்கையின் நிறம் நீலமாக இருக்கும். இதனால் ஆற்றின் வழியோரத்திலுள்ள பகுதிகள் பாதிக்காது.இதே சமயத்தில் வினாடிக்கு 6,500 கனஅடிக்கு மேல் திறக்க ஒரு மணி நேரம் திறக்கப்பட்டாலும், ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்படுகிறது. இதனால் மண்டலம் 'ஏ' வில் வழியோரத்திலுள்ள கல்லாபுரம், எலையமுத்தூர், கொழுமம் ஆகிய கிராமங்கள் பாதிக்கும் வாய்ப்புள்ளது.அதே போல் 13 ஆயிரம் கனஅடிக்கு மேல் அரை மணி நேரத்திற்கு கூட நீர் திறக்கப்பட்டாலும் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்படுகிறது. இதனால் மண்டலம், 'ஏ' மற்றும் 'பி' என இரு பகுதிகளும் பாதிக்கும் வாய்ப்புள்ளது.

    ஆற்றின் வழியோர கிராமங்களான, கல்லாபுரம், எலையமுத்தூர், கொழுமம் மட்டுமின்றி, மடத்துக்குளம், கணியூர், காரத்தொழுவு ஆகிய கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களில் ஓரளவு பாதிப்பை ஏற்படுத்தும் என அறிவிக்கப்படுகிறது. அணையிலிருந்து 20 ஆயிரத்து 175 கன அடி மற்றும் அதற்கு மேல் திறக்கப்பட்டால் வழியோரத்திலுள்ள உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், அரவக்குறிச்சி, கரூர் என அனைத்து வழியோர கிராமங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளதாக எச்சரிக்கை விடப்படுகிறது.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், அமராவதி அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படும் போது, வெளியேற்றப்படும் நீரின் அளவை பொறுத்து, பாதிப்புகள் அறியப்படுகிறது. இதற்காக வண்ண எச்சரிக்கை குறியீடுகள் உள்ளன.அதன் அடிப்படையில், வழியோர கிராமங்களுக்கு உள்ளூர் அதிகாரிகள் வாயிலாக எச்சரிக்கை வழங்கப்படுகிறது. பொதுவாக, வெள்ள காலங்களில் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ போகக்கூடாது. வழியோரத்தில், ஆற்றின் கரையில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர வேண்டும். கால்நடைகள், விவசாய பொருட்கள் இருந்தால், அவற்றையும் அகற்றிக்கொள்ள வேண்டும்.மழையின் தீவிரத்தை பொறுத்து வெள்ள நீர் வரும் என்பதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ராஜவாய்க்கால் பாசன நிலங்களில் குறுவை நெல் சாகுபடிக்காக சுற்றுக்கள் அடிப்படையில் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
    • கால்நடைகளின் குடிநீர் தேவைக்காக கடந்த 26ந் தேதி முதல் பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு இன்று வரை வழங்கப்படுகிறது.

    உடுமலை :

    உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து கடந்த மே மாதம் பழைய ஆயக்கட்டு 8 ராஜவாய்க்கால் பாசன நிலங்களில் குறுவை நெல் சாகுபடிக்காக சுற்றுக்கள் அடிப்படையில் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் உள்ள 25 ஆயிரத்து 250 ஏக்கர் நிலங்களில் உள்ள நிலைப்பயிர்களை காப்பாற்றுவதற்காகவும், கால்நடைகளின் குடிநீர் தேவைக்காக கடந்த 26ந் தேதி முதல் பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு இன்று வரை வழங்கப்படுகிறது.இந்நிலையில் பழைய ஆயக்கட்டு பாசனம், அலங்கியம் முதல் கரூர் வரை, வலது கரை பகுதியிலுள்ள 10 வாய்க்கால் பாசனத்திற்குட்பட்ட பகுதியிலுள்ள நிலையிலுள்ள பயிர்களுக்கு உயிர்த்தண்ணீர் மற்றும் வழியோர பகுதிகளின் குடிநீர்த்தேவையை கருத்தில் கொண்டு, கடந்த, 8ந் தேதி முதல் வரும், 17ந் தேதி வரை 10 நாட்களுக்கு 1,072 மில்லியன் கனஅடி நீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன் அடிப்படையில், அணையில் இருந்து ஆற்று மதகு வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், அமராவதி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டு, தண்ணீர் ஓடி வருகிறது.அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து, அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ள நிலையிலும், அணை நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகிறது.

    அமராவதி அணை முழு கொள்ளளவை எட்டும் வரை காத்திருக்காமல் நீர்வரத்தை பொறுத்து அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்படுவது வழக்கம்.
    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையின் நீர்மட்டம் தற்போது 86.22 அடியாக உள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால் முழு கொள்ளளவான 90அடியை நெருங்கும் நிலை உள்ளது. இதனால்  உபரிநீர் திறக்க  வாய்ப்புள்ளதால் அமராவதி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பொதுப்பணித்துறையினர்  கூறுகையில், அமராவதி அணை முழு கொள்ளளவை எட்டும் வரை காத்திருக்காமல் நீர்வரத்தை பொறுத்து அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்படுவது வழக்கம்.  தற்போது அணைக்கு 686 கனஅடி நீர் வரத்து   உள்ளது.

    நீர்வரத்து அதிகரிப்பால் எந்நேரமும் அதிகமான அளவில் உபரி நீர் திறக்க வாய்ப்புள்ளது. இதனால் முன்கூட்டியே வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றனர்.
    ×