search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனுப்புதல்"

    • மாவட்டத்திலுள்ள ரேஷன்கடைகளுக்கு அனைத்து பொருட்களும் உரிய நேரத்தில் அனுப்பி வைக்கப்படுவதில்லை.
    • பி.எச்.எச்., கார்டுகளுக்கு சில மாதங்களாகவே குறைந்த அளவே அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

    திருப்பூர்,:

    ரேஷன் கடைகளுக்கு உரிய நேரத்தில் அனைத்து பொருட்களையும் அனுப்பி வைக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.இது குறித்து திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்கம் சார்பில், கலெக்டர் கிறிஸ்துராஜிடம் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த சில மாதங்களாக திருப்பூர் மாவட்டத்திலுள்ள ரேஷன்கடைகளுக்கு அனைத்து பொருட்களும் உரிய நேரத்தில் அனுப்பி வைக்கப்படுவதில்லை. தொடர்ந்து பல மாதங்களாக துவரம் பருப்பு, பாமாயில் ஆகியன மாத இறுதி நாட்களிலேயே வழங்கப்படுகிறது.இதனால் ரேஷன் விற்பனையாளர் - பொதுமக்களிடையே வீண் பிரச்னைகள் ஏற்படுகின்றன. மிகுந்த மன உளைச்சலுக்கு ரேஷன் பணியாளர் தள்ளப்படுகின்றனர். அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வருகிறது. இந்நிலையில், இம்மாதமும் குடோன்களில் துவரம்பருப்பு, பாமாயில் இல்லாமலேயே, ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. பி.எச்.எச்., கார்டுகளுக்கு சில மாதங்களாகவே குறைந்த அளவே அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

    ரேஷன் கடைகளுக்கு அனைத்து பொருட்களையும் ஒரே நேரத்தில் அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×