search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அ.தி.மு.க. உறுப்பினர்கள்"

    • ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் இன்று மாநகராட்சியின் அவசர கூட்டம் மேயர் நாகரத்தினம் தலைமையில் நடந்தது.
    • கூட்டதிதல் தமிழக அரசு மின்கட்டண உயர்வை அறிவித்துள்ளது. இதற்கு எதற்கு தெரிவித்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் இன்று மாநகராட்சியின் அவசர கூட்டம் மேயர் நாகரத்தினம் தலைமையில் நடந்தது. துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டம் தொடங்கியதும் மேயர் நாகரத்தினம் திருக்குறள் வாசித்து அதற்கான பொருளையும் கூறினார். அதனைத் தொடர்ந்து 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக நடத்திய முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதேபோல் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை அறிமுகப்படுத்திய முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதேப்போல் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட வரும் பல்வேறு பணிகள் குறித்து 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அதன் பின்னர் அ.தி.மு.க மாநகராட்சி எதிர்க்கட்சித் துணைத்தலைவர் சூரம்பட்டி ஜெகதீஷ் பேசும்போது, 31-வது வார்டில் ஏற்கனவே 11 போர்வெல்கள், மாநகராட்சி சார்பில் 4 போர்வெல்கள் என மொத்தம் 20 போர்வெல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஆனால் அவற்றுக்கு முறையான டேங்க் ஆப்ரேட்டர்கள் நியமிக்கப்படவில்லை. மேலும் கூட்டத்தொடரில் கவுன்சிலர்கள் பேசுவது பதிவு செய்யப்படுகிறதா? என்று தெரியவில்லை.

    ஏற்கனவே கவுன்சிலர்கள் புகைப்படம் எங்கு வைக்க வேண்டும் என்று கூறி இருந்தேன். அதை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சி பகுதியில் போதுமான தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை என்று பேசினார்.

    அப்போது இடையில் தி.மு.க. கவுன்சிலர் பேசினார். இதனால் அ.தி.மு.க., தி.மு.க. உறுப்பினர்கள் இடைய காரசார விவாதம் நடைபெற்றது.

    தொடர்ந்து அ.தி.மு.க. மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் தங்கமுத்து பேசுகையில், மாநகராட்சியில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் முழு நேரமும் டாக்டர்கள் நியமிக்கப்படாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    சாக்கடைகள் முறையாக தூர்வரப்படுவதில்லை, ஊராட்சி கோட்டை குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் முறையாக விநியோகிக்கப்படவில்லை என்று கூறினார்.

    மேலும் தமிழக அரசு மின்கட்டண உயர்வை அறிவித்துள்ளது. இந்த மின் கட்டண அறிவிப்பு மக்களை பாதிக்கும். எனவே இதற்கு நாங்கள் எதற்கு தெரிவித்து வெளிநடப்பு செய்கிறோம் என்றார்.

    அதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. எதிர்க்கட்சி துணைத் தலைவர் சூரம்பட்டி ஜெகதீஷ், கவுன்சிலர்கள் தங்கவேல், நிர்மலா தேவி, ஹேமலதா, பாரதி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

    இதைத்தொடர்ந்து மற்ற கவுன்சிலர்கள் தங்களது வார்டில் உள்ள பிரச்சனைகளை குறித்து விரிவாக பேசினர்.

    ×