search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Youth women"

    சேலம் பழைய சூரமங்கலத்தில் சமையல் செய்த போது எதிர்பாரத விதமாக இளம்பெண் மீது தீப்பிடித்து உடல் கருகிய நிலையில் அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    சேலம்:

    சேலம் பழைய சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் நேரு. இவரது மனைவி கீதா (வயது 38).

    இவர் நேற்று மண் எண்ணை ஸ்டவ்வில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீப்பிடித்தது. மள மள வென பிடித்த தீ அவரது உடல் முழுவதும் பரவியது.

    இதனால் உடல் கருகிய அவர் வலியால் அலறி துடித்தார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    90 சதவீதம் உடல் கருகிய நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தீ விபத்தில் உடல் கருகிய கீதாவுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். #tamilnews
    ×