search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young men arrested"

    புதுவையிலிருந்து சேலத்துக்கு காரில் கடத்தப்பட்ட ரூ. 5 லட்சம் மதிப்புள்ள மதுப்பாடில்களை போலீசார் பறிமுதல் செய்து வாலிபர் கைது செய்தனர்.

    விழுப்புரம்:

    புதுவையிலிருந்து தமிழகத்துக்கு மதுப்பாட்டில்கள் கடத்துபடுவதை தடுக்கும் பொருட்டு விழுப்புரத்தில் மதுவிலக்கு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த சோதனை சாவடிகளில் 24 மணி நேரமும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வழக்கம் போல் இன்று காலை விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ள கெங்கராய பாளையம் மது விலக்கு சோதனை சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த காரை தடுத்து நிறுத்தி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை சோதனை செய்த போது அதில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள மதுப்பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கபட்டது.

    இதைத் தொடர்ந்து கார் டிரைவரிடம் நடத் திய விசாரணையில் அவர் சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த மேல் தொம்மை பகுதியை சேர்ந்த நிதிஷ்குமார் (வயது 20) என்பதும் அவர் புதுவையிலிருந்து சேலத்துக்கு மதுப்பாட்டில்களை கடத்தி சென்றதும் தெரியவந்தது.

    அதன் பின்னர் கார் டிரைவர் நிதிஷ்குமாரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து மதுப்பாட்டில்களையும் காரையும் பறிமுதல் செய்தனர். 

    காதலித்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்தவர் திருமணத்திற்கு மறுத்ததால் கைது செய்யப்பட்டார்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள புத்தூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ஜோதிலட்சுமி (வயது 23). இவர், ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    எனக்கும், செட்டியார் தெருவைச் சேர்ந்த பாண்டியராஜ் (29) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. தனியார் செல்போன் நிறுவனத்தின் விற்பனை பிரிவில் வேலை பார்த்து வரும் அவரை 3 ஆண்டுகளாக காதலித்தேன்.

    திருமணம் செய்வதாக பாண்டியராஜ் கூறியதை நம்பி பல இடங்களுக்குச் சென்றேன். அப்போது ஆசை வார்த்தை கூறி அவர் என்னிடம் உல்லாசம் அனுபவித்தார்.

    ஆனால் தற்போது திருமணம் செய்ய மறுக்கிறார். பலமுறை கேட்டும் அவர், திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை. எனவே பாண்டியராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

    இது குறித்து ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குருவத்தாய் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து பாண்டியராஜ் கைது செய்யப்பட்டார்.

    ×