search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Weather Center information"

    தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
    சென்னை:

    கடந்த வருடம் வடகிழக்கு பருவமழை சில மாவட்டங்களில் நன்றாக பெய்தது. சில மாவட்டங்களில் போதிய மழை பெய்யவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.

    இது குறித்து சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது:-

    தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அது கர்நாடகம், கேரளா முழுவதும், தமிழகத்தின் சில மாவட்டங்களிலும் தீவிரம் அடைந்துள்ளது. அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னகல்லாறில் 19 செ.மீ. மழை பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் உள்மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும். தென் மாவட்டங்களிலும், வட மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் இன்று (திங்கட்கிழமை) கனமழை பெய்யும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு பற்றிய விவரம் வருமாறு:-

    சின்னகல்லாறு 19 செ.மீ., வால்பாறை 17 செ.மீ., பாபநாசம் 12 செ.மீ., பெரியாறு 9 செ.மீ., தேவலா 7 செ.மீ., கூடலூர் பஜார், குந்தாபாலம் தலா 6 செ.மீ., பேச்சிப்பாறை, பொள்ளாச்சி தலா 5 செ.மீ., நடுவட்டம், செங்கோட்டை, மைலாடி, குளச்சல் தலா 4 செ.மீ., ஊட்டி, நாகர்கோவில், மணிமுத்தாறு, தென்காசி, தக்கலை தலா 3 செ.மீ., குழித்துறை, ராதாபுரம், கன்னியாகுமரி, இரணியல் தலா 2 செ.மீ., ஆயிக்குடி, பூதப்பாண்டி, கேத்தி, கூடலூர், அம்பாசமுத்திரம், பெண்ணாகரம் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது. 
    ×