search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "water shortage Summer time"

    • தண்ணீர் என்பது யாருடைய சொத்தும் இல்லை.
    • கர்நாடகாவில் பால் உற்பத்தி குறைந்துள்ளது.

    பெங்களூர்:

    கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்வது தொடர்பாக துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    இதில் பெங்களூரில் நிலவும் குடிநீர் பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்று விவாதிக்கப்பட்டது. பின்னர் டி.கே.சிவகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெங்களூர் மாநகராட்சி பகுதியில் 14 ஆயிரத்து 781 ஆழ்துளை கிணறுகள் உள்ளது. அவற்றில் 6,997 ஆழ்துளை கிணறுகள் வறண்டு விட்டன. தண்ணீர் என்பது யாருடைய சொத்தும் இல்லை. இது அரசின் சொத்து. எனவே பாசன மற்றும் தனியார் போர்வெல்களில் தண்ணீர் தேவைப்பட்டால் எடுத்துக் கொள்வோம். இதற்காக போர்வெல் உரிமையாளர்களுக்கு ஓரளவு இழப்பீடு வழங்கப்படும். மேலும் நகரில் புதியதாக ஆழ்துளை கிணறுகளும் தோண்டப்படும்.


    காவிரி 5-ம் கட்ட திட்டம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. மே மாதம் இறுதிக்குள் பெங்களூர் சுற்றுப் பகுதிகளில் உள்ள 110 கிராமங்களுக்கு காவிரி குடிநீர் வழங்கப்படும். 2 கிலோமீட்டர் தூரத்திற்கு பைப் லைன் அமைப்பதில் சிறிய பிரச்சினை உள்ளது. அந்த இடத்தை பார்வையிட்டு பிரச்சினைகளை சரிசெய்து பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    தனியார் தண்ணீர் டேங்கர் லாரி உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை வியாழக்கிழமைக்குள் பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் அதிகாரிகள் பதிவு செய்யாத தண்ணீர் டேங்கர் லாரிகளை பறிமுதல் செய்வார்கள்.

    தற்போது கர்நாடகாவில் பால் உற்பத்தி குறைந்துள்ளது. மேலும் சில பால் டேங்கர்கள் பயன்படுத்தப்படாமல் கிடப்பதாக தெரிய வந்துள்ளது. எனவே அவற்றை சுத்தம் செய்து பெங்களூரு நகருக்கு குடிநீர் வினியோகம் செய்ய பயன்படுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×