search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Umran Malik"

    • ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த உம்ரான் மாலிக் 150 கி.மீ. வேகத்தில் பந்து வீசக் கூடியவர்.
    • ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத் அணிக்காக விளையாடி 14 போட்டியில் 22 விக்கெட் வீழ்த்தினார்.

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் 16-ந்தேதி தொடங்கி நவம்பர் 13-ந்தேதி வரை தொடங்குகிறது. இந்தத் தொடரில் விளையாடும் அனைத்து அணிகளும், தங்களுடைய அணி வீரர்களை அறிவித்த நிலையில், தொடருக்கு தயாராகி வருகின்றன.

    இந்திய அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா இடம் பிடித்திருந்தார். அவருடன் புவனேஸ்வர்குமார், ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். முகமது ஷமி, தீபக் சாஹர் ஆகியோர் காத்திருப்பு வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

    பும்ரா முதுகு வலி காரணமாக ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகினார். அதன்பின், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் விளையாடினார். தற்போது நடைபெற்று வரும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடியபோது, மீண்டும் முதுகு வலி ஏற்பட்டுள்ளது.

    இதனால் தென்ஆப்பிரிக்கா தொடரில் இருந்து விலகியுள்ளார். ஆகவே, பும்ரா டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் அவருக்குப் பதிலாக முகமது ஷமி அல்லது தீபக் சாஹர் அணியில் சேர்க்கப்படலாம். இந்த நிலையில் முன்னாள் இந்திய அணி தேர்வாளரான வெங்சர்க்கார், நான் தேர்வாளராக இருந்திருந்தால், இளம் வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக்கை அணியில் சேர்த்திருப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து வெங்சர்க்கார் கூறுகையில் ''உம்ரான் மாலிக் விஷயத்தில் மாற்றி யோசிக்க ஒன்றுமில்லை. நான் அவரை அணியில் தேர்வு செய்திருப்பேன். ஏனென்றால், அவரது வேகம். அவர் 150 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசுகிறார். நீங்கள் அவரை தற்போது தேர்வு செய்ய வேண்டும். அவர் 130 கி.மீட்டர் வேக பந்து வீச்சாளராக இருந்தால், தேர்வு செய்ய இயலாது. துபாய் போன்ற இடங்களில் ஆடுகளம் பிளாட்டாக புற்கள் இன்றி காணப்படும். அங்கு பவுன்ஸ் இருக்காது. ஆகவே, அணிக்கு அதிவேகப்பந்து வீச்சாளர்கள் தேவை. நீங்கள் மிதவேகப்பந்து வீச்சாளர்களுடன் சென்றால், தோற்கடிக்கப்படுவீர்கள். வேகப்பந்து வீச்சால் பேட்ஸ்மேன்களை வீழ்த்த, அதிவேக பந்து வீசாளர்கள் தேவை.

    அதேபோல் முகமது ஷமி, ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். அய்யர் தற்போது சிறந்த ஃபார்மில் உள்ளார். அவர் சேர்க்கப்படவில்லை. கவுன்ட்டி கிரிக்கெட்டில் ஷுப்மான் கில் அபாரமாக விளையாடி சதம் விளாசியுள்ளார்'' என்றார்.

    உம்ரான் மாலிக் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 150 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசி முன்னணி பேட்ஸ்மேன்களை திணறடித்ததன் விளைவாக, சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூன் மாதம் அயர்லாந்துக்கு எதிரான தொடரின்போது இந்திய அணியில் அறிமுகம் ஆனார்.

    • வேகப்பந்து வீச்சாளர்கள் டி20 கிரிக்கெட்டுக்கு முன்பாக முதலில் டெஸ்ட் போட்டிகளில் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
    • டி20 கிரிக்கெட்டில் அவரை சரமாரியாக அடிக்க பேட்ஸ்மென்கள் தயாராக உள்ளனர்.

    இந்தியா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டி20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. கடைசி போட்டியில் புவனேஸ்வர் குமார், பும்ரா போன்ற சீனியர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு உம்ரான் மாலிக், ஆவேஷ் கான் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

    ஆனால் அந்த முடிவு இறுதியில் இந்தியாவிற்கு தோல்வியில்தான் முடிந்தது. ஏனெனில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவரில் 215 ரன்கள் சேர்த்தது. இந்தியா சார்பில் ஹர்ஷல் படேல் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். எஞ்சிய 3 பவுலர்கள் 10-க்கும் மேற்பட்ட எக்கனாமியில் ரன்களை வாரி வழங்கினார். குறிப்பாக உம்ரான் மாலிக் 4 ஓவரில் 1 விக்கெட்டை எடுத்தாலும் 56 ரன்களை வாரி வழங்கினார்.

    கடந்த வருட ஐபிஎல் தொடரில் ஒருசில போட்டிகளில் அசத்தியதால் இந்த வருடம் 4 கோடிக்கு தக்க வைக்கப்பட்டு ஹைதராபாத் அணிக்காக விளையாடிய அவர் தொடர்ச்சியாக 150 கி.மீ வேகத்தில் பந்து வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்தார். குறிப்பாக 157.0 கி.மீ வேகப்பந்தை வீசி 22 வயதிலேயே ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக பந்தை வீசிய இந்திய பவுலராக சரித்திர சாதனை படைத்தார்.

    இந்த அளவுக்கு வேகத்தில் பந்து வீசும் ஒருவர் இந்திய அணியில் இல்லாத காரணத்தாலும் இவரின் வேகத்துக்கு ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் சாதகமாக இருக்கும் என்பதாலும் வரும் அக்டோபரில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் இவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்று ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர் போன்ற ஜாம்பவான்கள் கேட்டுக் கொண்டனர்.

    ஆனால் வேகத்துக்கு ஈடாக ரன்களையும் வாரி வழங்கும் இவரை தொடர்ச்சியாக 2, 3 வருடங்கள் சிறப்பாக செயல்படாமல் இந்திய அணியில் அவசரப்பட்டு தேர்வு செய்யக்கூடாது என்று கபில் தேவ் போன்ற ஜாம்பவான்களும் கேட்டுக் கொண்டனர்.

    இந்நிலையில் உம்ரான் மாலிக்கை டி20 அணியில் தேர்வு செய்திருக்க கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் மதன் லால் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    மதன் லால் - உம்ரான் மாலிக்
    மதன் லால் - உம்ரான் மாலிக்

    வேகப்பந்து வீச்சாளர்கள் டி20 கிரிக்கெட்டுக்கு முன்பாக முதலில் டெஸ்ட் போட்டிகளில் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். டெஸ்ட் போட்டிதான் அவரைப் போன்ற பவுலரை உறுதியானவராக மாற்றக்கூடிய கிரிக்கெட். அவர் நல்ல பவுலர் ஆனாலும் அவரை இன்னும் நல்ல பவுலராக நீங்கள் உருவாக்க வேண்டும்.

    அவருக்கு டெஸ்ட் போட்டியில் வாய்ப்பளித்து தொடர்ச்சியாக 10-15 ஓவர்கள் வீச வைத்தால் தான் விக்கெட்டுகள் எடுப்பது எப்படி என்பதை புரிய வைக்க முடியும். ஆனால் டி20 கிரிக்கெட்டில் அவரை சரமாரியாக அடிக்க பேட்ஸ்மென்கள் தயாராக உள்ளனர். ஏனெனில் அவரின் பந்துகள் பேட்ஸ்மேன்கள் அடிப்பதற்கு ஏற்றவாறு வருகிறது.

    நான் ஏற்கனவே கூறியது போல் விக்கெட்டுக்கள் எடுக்காமல் பந்தை ஸ்விங் செய்யாமல் வேகத்தை மட்டும் கொண்டிருந்தால் எந்த பயனும் இல்லை. தற்போது கொஞ்சமும் அனுபவமற்றவராக இருக்கும் அவருக்கு தேவையான அனைத்து அனுபவமும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கிடைக்கும். நான் தேர்வுக்குழு தலைவராக இருந்தால் நிச்சயமாக அவரை டி20 அணியில் சேர்த்திருக்க மாட்டேன் என்று கூறினார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உம்ரான் மாலிக்கின் பந்துவீச்சு வேகத்தை எதிர்கொள்வது எளிதல்ல.
    • இறுதி ஓவரின்போது உண்மையை சொல்ல வேண்டுமானால் எந்த கவலையும் படவில்லை.

    டுப்ளின்:

    இந்தியா-அயர்லாந்து அணிகள் மோதிய 2-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நேற்று நடந்தது.

    இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    முதலில் விளையாடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 225 ரன் குவித்தது.

    3-வது வீரராக களம் இறங்கிய தீபக் ஹூடா அபாரமாக ஆடி சதம் அடித்தார். அவர் 57 பந்தில் 104 ரன் எடுத்தார். இதில் 9 பவுண்டரியும் , 6 சிக்சர்களும் அடங்கும். சஞ்சு சாம்சன் 42 பந்தில் 77 ரன் ( 9 பவுண்டரி,4 சிக்சர் ) எடுத்தார். இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 85 பந்துகளில் 176 ரன் குவித்தது முக்கியமானதாகும்.

    அயர்லாந்து அணி தரப்பில் மார்க் ஆதிர் 3 விக்கெட்டும், ஜாஸ் லிட்டில், கிரேக் யங் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    226 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் அயர்லாந்து ஆடியது. பால் ஸ்டிர்லிங்-கேப்டன் பால்பிரீன் ஜோடி அதிரடியான தொடக்கத்தை கொடுத்தது. 3.5 ஓவரில் அந்த அணி 50 ரன்னை தொட்டது.

    ஸ்கோர் 72 ரன்னாக ( 5.4 ஓவர்) இருந்த போது தொடக்க ஜோடியை ரவி பிஷ்னோய் படேல் பிரித்தார். ஸ்டிர்லிங் 18 பந்தில் 40 ரன் ( 5 பவுண்டரி, 3 சிக்சர் ) எடுத்தார். அடுத்து வந்த டெலனி ரன்எதுவும் எடுக்காமல் ரன் அவுட் ஆனார்.

    மறுமுனையில் இருந்த கேப்டன் பால்பிரீன் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 37 பந்தில் 60 ரன்னில் வெளியேற்றப்பட்டார். அவரது ஸ்கோரில் 3 பவுண்டரியும், 7 சிக்சரும் அடங்கும். அப்போது அயர்லாந்து 10.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 117 ரன் என்ற நிலையில் இருந்தது.

    ஒரு ஓவருக்கு 12 ரன்னுக்கு மேல் தேவைப்பட்டது. அயர்லாந்து வீரர்கள் ஹேரி டெக்டரும், ஜார்ஜ் டாக்ரெலும் சளைக்காமல் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். கடைசி 3 ஓவரில் வெற்றிக்கு 38 ரன் தேவைப்பட்டது. கைவசம் 6 விக்கெட் இருந்தது.

    18-வது ஓவரில் புவனேஸ்வர் குமார் சிறப்பாக பந்துவீசி 7 ரன் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். டெக்டர் 28 பந்தில் 39 ரன் (5 பவுண்டரி) எடுத்து அவுட் ஆனார்.

    ஹர்சல் படேல் வீசிய 19-வது ஓவரில் அயர்லாந்து 14 ரன் எடுத்தது. மார்க் ஆதிர் ஒரு பவுண்டரியும், ஒரு சிக்சரும் அடித்தார். ஆட்டத்தின் கடைசி ஓவரில் 17 ரன் தேவைப்பட்டது.

    உம்ரான் மாலிக் அந்த ஓவரை வீசினார். முதல் பந்தில் ரன் கொடுக்கவில்லை. அடுத்த பந்து நோபால் ஆனது. 2-வது மற்றும் 3-வது பந்தில் அடுத்தடுத்து ஆதிர் பவுண்டரி அடித்தார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    கடைசி 3 பந்தில் அயர்லாந்து வெற்றிக்கு 8 ரன் தேவைப்பட்டது. ஆனால் உம்ரான் மாலிக் நேர்த்தியாக வீசி 3 ரன்களே கொடுத்தார். அயர்லாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 221 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    டாக்ரெல் 16 பந்தில் 36 ரன்னும் (3 பவுன்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். புவனேஸ்வர்குமார், ஹர்சல் படேல், உம்ரான் மாலிக், ரவி பிஸ்னோய் தலா ஒரு விக்க்ட் கைப்பற்றினார் கள்.

    இந்த வெற்றி மூலம் 2 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

    வெற்றிக்கு பிறகு பேசிய இந்திய அணி கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா கடைசி ஓவரை புதுமுக வீரரான உம்ரான் மாலிக்குக்கு கொடுத்து ஏன்? என்பது பற்றி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இறுதி ஓவரின்போது உண்மையை சொல்ல வேண்டுமானால் எந்த கவலையும் படவில்லை. நெருக்கடியில் சிக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். உம்ரான் மாலிக் மீது முழு நம்பிக்கை இருந்தது.

    அவருடைய பந்துவீச்சு வேகத்தை எதிர்கொள்வது எளிதல்ல. அயர்லாந்து வீரர்கள் சிறப்பாக ஆடி வந்தனர். ஆனாலும் உம்ரான் மாலிக் நேர்த்தியாக விளையாடினார். அவர் மீதுள்ள நம்பிக்கையால் கடைசி ஓவரை கொடுத்தேன்.

    நெருக்கடியான இந்த நேரத்தில் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக விளையாடி வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

    இவ்வாறு ஹர்த்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.

    • திட்டமிட்டு திறமையுடன் வீசுவது அவசியமானது என ஹர்ஷல் படேல் தகவல்.
    • பேட்ஸ்மேன்களை விட எனது பங்களிப்பு ஒரு பங்கு அதிகமாக இருக்க வேண்டும்.

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 4-வது 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடக்கிறது. இந்நிலையில் இன்றைய ஆட்டம் குறித்து இந்திய அணியின் வேகப்பந்து வீரர் ஹர்ஷல் படேல் கூறியதாவது:-

    கடந்த ஆட்டத்தில் எனது திறமையைான பந்து வீச்சை வெளிப்படுத்தினேன். எனது திறமையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவேன். பேட்ஸ்மேன்களை விட எனது பங்களிப்பு ஒரு பங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.

    உம்ரான் மாலிக் போன்று என்னால் வேகமாக பந்து வீச இயலாது. ஆனால் திட்டமிட்டு திறமையுடன் வீசுவது அவசியமானது. அதில்தான் எனது கவனம் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். ஹர்ஷல் படேல் கடந்த போட்டியில் 4 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

    ×