என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    உம்ரான் மாலிக் போன்று என்னால் வேகமாக பந்து வீச இயலாது- ஹர்ஷல் படேல் சொல்கிறார்
    X

    உம்ரான் மாலிக் - ஹர்ஷல் படேல் 

    உம்ரான் மாலிக் போன்று என்னால் வேகமாக பந்து வீச இயலாது- ஹர்ஷல் படேல் சொல்கிறார்

    • திட்டமிட்டு திறமையுடன் வீசுவது அவசியமானது என ஹர்ஷல் படேல் தகவல்.
    • பேட்ஸ்மேன்களை விட எனது பங்களிப்பு ஒரு பங்கு அதிகமாக இருக்க வேண்டும்.

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 4-வது 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடக்கிறது. இந்நிலையில் இன்றைய ஆட்டம் குறித்து இந்திய அணியின் வேகப்பந்து வீரர் ஹர்ஷல் படேல் கூறியதாவது:-

    கடந்த ஆட்டத்தில் எனது திறமையைான பந்து வீச்சை வெளிப்படுத்தினேன். எனது திறமையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவேன். பேட்ஸ்மேன்களை விட எனது பங்களிப்பு ஒரு பங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.

    உம்ரான் மாலிக் போன்று என்னால் வேகமாக பந்து வீச இயலாது. ஆனால் திட்டமிட்டு திறமையுடன் வீசுவது அவசியமானது. அதில்தான் எனது கவனம் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். ஹர்ஷல் படேல் கடந்த போட்டியில் 4 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

    Next Story
    ×