search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "transportation"

    • டிக்கெட் முன்பதிவு மைய வேலை நேரத்தை மாலை வரை நீட்டிக்க வேண்டும்.
    • சோழன் விரைவு ெரயிலுக்கு இணைப்பு ரயிலை உடனடியாக இயக்க வேண்டும்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மணிஷ் அகர்வால் பாதுகாப்பு மற்றும் அலுவலர் குடியிருப்பு, சரக்கு போக்குவரத்து முனையகட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.

    அவருடன் கோட்ட பொறியாளர் (கிழக்கு) ரவிக்குமார், வர்த்தக பிரிவு மேலாளர், எலக்ட்ரிக்கல் சிக்னல் பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    அது சமயம் பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் தலைவர் ஜெயராமன், துணைச் செயலாளர் கலியபெருமாள், செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணி, உறுப்பினர்கள் சங்கர், பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கை மனுவை சமர்ப்பித்தனர் அவன் விபரம் வருமாறு :

    பட்டுக்கோட்டை இரயில் நிலையத்தில் விரைவில் சரக்கு போக்குவரத்தை தொடங்க வேண்டும், பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் உள்ள சிறிய பழுதுகளை நீக்க வேண்டும், கட்டி முடிக்கப்பட்ட பட்டுக்கோட்டை இரயில் நிலைய காவல் நிலையத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், டிக்கெட் முன்பதிவு மைய வேலை நேரத்தை மாலை வரை நீட்டிக்க வேண்டும்,

    சோழன் விரைவு இரயிலுக்கு இணைப்பு ரயிலை உடனடியாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

    கோரிக்கை மனுவினை பெற்றுக் கொண்ட கோட்ட ரயில்வே மேலாளர், சோழன் விரைவு ரயிலுக்கான இணைப்பு ரயில் பரிந்துரை செய்து அனுப்பப்பட்டுள்ளதாகவும் ரயில்வே வாரிய அனுமதிக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

    விரைவில் இரவு நேர கேட் கீப்பர்கள் நியமிக்கப்பட்டு முழுமையான ரயில் சேவை குறிப்பாக தாம்பரம், செங்கோட்டை வாரம் மும்முறை ரயில் இயக்கப்படும் என்று தெரிவித்தார்.

    முன்பதிவு மைய நேரத்தை நீட்டிக்கவும் பரிசீலனை செய்வதாக உறுதியளித்தார்.

    பட்டுக்கோட்டை ரயில் நிலையம் நன்றாக பராமரிக்கப்படுவதற்கு ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

    • திண்டிவனம் அருகே ஓங்கூர் ஆற்றின் பாலத்தில் போக்குவரத்து ஒரு வழிபாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • இந்த பணியானது 10 நாட்களுக்கு மேலாக நடைபெறும் என தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையரகம் தெரிவித்துள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஓங்கூர் ஆற்றின் குறுக்கே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 2 பாலங்கள் உள்ளன. இந்தப் பாலங்கள் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய, தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லக்கூடிய போக்குவரத்துக்கு முக்கிய வழிதடம் ஆகும். இந்த பாலம் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இந்த பாலத்தில் தற்போது பழுது ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகளிடமிருந்து தொடர்ந்து புகார் வந்தவண்ணம் இருந்தது. இந்நிலையில் நேற்று முதல் பராமரிப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணியானது 10 நாட்களுக்கு மேலாக நடைபெறும் என தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையரகம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி வரக்கூடிய வாகனங்கள் மற்றொரு பாலத்தில் ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டு, அந்த பாலத்தின் வழியாக தற்போது வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    • சென்னை முழுவதும் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தீவிரமாக விழிப்புணர்வு செய்து கையெழுத்து இயக்கத்தையும் நடத்தி வருகிறார்கள்.
    • வாகனங்களில் செல்பவர்கள் அதிக ஒலி எழுப்புவதை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் புதிய நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் வாகனங்களில் செல்பவர்கள் அதிக ஒலி எழுப்புவதை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் புதிய நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளனர்.

    சென்னை மாநகர சாலைகளில் செல்பவர்கள் அதிக ஒலி எழுப்புவதை கட்டுப்படுத்த கமிஷனர் சங்கர் ஜிவால், போக்கு வரத்து கூடுதல் கமிஷனர் கபில்குமார் சரத்கர் ஆகியோரது மேற்பார்வையில் விழிப்புணர்வு மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    நேற்று முன்தினம் தொடங்கிய இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வருகிற 3-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    சென்னை முழுவதும் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தீவிரமாக விழிப்புணர்வு செய்து கையெழுத்து இயக்கத்தையும் நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் அதிக ஒலி எழுப்புபவர்களை பிடிக்க புதிய மிஷின் வாங்கப்பட இருப்பதாகவும், அதன் பின்னர் அதிக ஒலி எழுப்புபவர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் கண்டுபிடிக்கும் மிஷின் குறித்து ஆலோசித்து வருகிறோம்.

    இந்த மிஷின் செயல்பாட்டுக்கு வந்ததும், அதிக ஒலி எழுப்புபவர்களிடம் போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் கூறும்போது, 'மாசு கட்டுப்பாட்டு துறையினருடன் இணைந்து சென்னை மாநகர போலீசார் அதிக ஒலி அளவை அபராதம் விதிக்கும் நடவடிக்கைகள் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

    அதிக ஒலி எழுப்புவதாக சந்தேகிக்கப்படும் வாகனத்தை 7 மீட்டர் தூரத்தில் நிறுத்தி ஹாரன் அடிக்க சொல்லி பரிசோதிக்க உள்ளோம். ரூ.2 ஆயிரம் மதிப்பிலான இந்த மிஷினை தற்போது தன்னார்வலர்கள் உதவியுடன் பரிசோதித்து வருகிறோம்' என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

    இதற்கிடையே இன்று சென்னை திருவொற்றியூரில் இன்று போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்பாபு தலைமையில் அதிகஓலி எழுப்பக்கூடாது என்பதை வலியுறுத்தி மாணவ-மாணவிகள் மூலம் விழிப்புணர்வு செய்யப்பட்டது.

    இதில் போக்குவரத்து போலீசார் பலர் பங்கேற்றனர். இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தவும் அதன் பின்னர் அபராதம் விதிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

    திண்டுக்கல்லில் போக்குவரத்து விதிகளை மீறிய லாரி மற்றும் ஆம்னி பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வினய் உத்தரவின் பேரில் மாவட்ட வட்டார போக்குவரத்து அதிகாரி ஆனந்த் தலைமையில் போக்குவரத்து ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் அலுவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது அதிக பாரங்கள் ஏற்றி வந்த 3 லாரிகளை மடக்கி பிடித்து அவற்றுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    மேலும் 7 ஆம்னி பஸ்களை மடக்கி சோதனையிடப்பட்டது. அந்த வாகனங்களில் பிரதிபலிப்பான்கள் இல்லாமல் இருந்தது. புகைச் சான்று இல்லாதது, முகப்பு விளக்குகளில் கண்ணை கூசச் செய்யும் வகையில் அதிக வெளிச்சம் தரும் விளக்குகளை பொருத்தி இருந்தது போன்ற குறைபாடுகளுக்காக தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.14 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் அரசு அனுமதி இல்லாமல் ஒரு லாரியில் மணல் கடத்தி வந்தது தெரிய வரவே அதனை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி லாரியை தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர்.

    ×