search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "trainee aircraf crashed"

    தெலுங்கானா மாநிலம், யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் இன்று பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் அதில் சென்ற விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். #TraineeAircraft #TraineeAircraftCrashed
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம், யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள ஹக்கிம்பேட் விமானப்படை தளத்தில் இருந்து இன்று வழக்கம்போல் பயிற்சிக்காக ஒரு சிறியரக விமானம் புறப்பட்டு சென்றது.



    வானில் வட்டமடித்துக்கொண்டிருந்தபோது பாஹுபேட்டா பகுதியில் நிலைதடுமாறிய விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது. விழுந்த வேகத்தில் தீபிடித்து எரிந்தபோது அதில் இருந்த விமானி காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தற்போது அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்த விபத்துக்கான காரணம் தொடர்பான முதல்கட்ட தகவல் ஏதும் வெளியாகவில்லை. #TraineeAircraft  #TraineeAircraftCrashed 
    ×