search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Traffic affect"

    போடி மெட்டு மலைப் பாதையில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டது. #Landslide

    மேலசொக்கநாதபுரம்:

    தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கம்பம் மெட்டு, குமுளி, போடி மெட்டு ஆகிய மலைச்சாலைகள் வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன. குமுளி மலைப்பாதையில் இரைச்சல் பாலம் அருகே நேற்று முன்தினம் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு வாகனங்கள் அனைத்தும் கம்பம் மெட்டு சாலை வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டன.

    நெடுஞ்சாலைத்துறையினர் சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதே போல் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மூணாறு, அடிமாலி, இடுக்கி உள்ளிட்ட இடங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதே போல் குமுளியில் இருந்து கோட்டயம், வண்டி பெரியாறு செல்லும் சாலை முழுவதும் வெள்ளக் காடாக காட்சியளிப்பதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    இதனால் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சரக்குகள் ஏற்றிச் சென்ற லாரிகள் கடந்த 3 நாட்களாக குமுளியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

    கன மழை நீடித்து வருவதால் போடி மெட்டு பகுதியிலும் சாலைகளில் தண்ணீர் தேங்கத் தொடங்கியுள்ளது. இதே போல் தோண்டிமலை சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள், மரங்கள் சாய்ந்தன.

    இதனால் போடியில் இருந்து மூணாறு செல்லும் வாகனங்கள் முந்தல் சோதனைச்சாவடியில் திருப்பி விடப்பட்டுள்ளன. பாதிப்பு அதிகரித்து காணப்பட்டதால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.

    இதனை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். #Landslide

    ×