search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "tiruvannamalai suicide"

  • நாதஸ்வர பயிற்சிக்கு சென்ற இடத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  • சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் நாகராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  ஆரணி:

  திருவள்ளூர் மாவட்டம் அதிகந்தூர் அடுத்த கடப்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் நாகராஜ் (வயது16). இவர் ஆரணி அடுத்த எஸ்.வி.நகரத்தில் சண்முகம் என்பவர் வீட்டில் தங்கி நாதஸ்வர பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

  பயிற்சியின்போது நாகராஜ் திருமணம், கச்சேரி ஆகிய நிகழ்ச்சிகளில் நாதஸ்வரம் வாசித்து இருக்கிறார். நாகராஜ் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

  அந்தப் பெண்ணுடன் செல்போன் மூலம் பேசி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அப்பெண் இவருடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால் நாகராஜ் மன உளைச்சலில் காணப்பட்டார்.

  நேற்று பயிற்சிகளை முடித்துவிட்டு மாலை வீட்டு மாடிக்கு சென்றார். அங்குள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த நாகராஜை மீட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

  இது குறித்து நாகராஜின் தந்தை கணேசன் ஆரணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் நாகராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாதஸ்வர பயிற்சிக்கு சென்ற இடத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • வரதராஜுலு, தனலட்சுமி இருவரும் சிகிச்சைக்காக செய்யாறு கீழ் புதுப்பாக்கம் விரிவு பகுதியில் வசிக்கும் தனது இளைய மகள் ஷர்மிளா வீட்டிற்கு வந்து தங்கியிருந்தனர்.
  • அறுவை சிகிச்சை செய்து ஏதாவது ஏற்பட்டால் எப்படி தனியாக வாழ்வது என கண்கலங்கி மகளிடமும் மருமகனிடம் கூறியுள்ளனர்.

  செய்யாறு:

  திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அடுத்த சட்டுவந்தங்கள் கிராமத்தை சேர்ந்தவர். வரதராஜுலு (வயது 82), இவரது மனைவி தனலட்சுமி (71), இவர்களுக்கு சசிகலா, ஷர்மிளா என்ற 2 மகளும் வெங்கடேசன் என்ற ஒரு மகனும் உள்ளனர்.

  வெங்கடேசன் சென்னையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். தனலட்சுமிக்கு கடந்த 10-ந்தேதி கீழே விழுந்து இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது.

  இதனால் வரதராஜுலு, தனலட்சுமி இருவரும் சிகிச்சைக்காக செய்யாறு கீழ் புதுப்பாக்கம் விரிவு பகுதியில் வசிக்கும் தனது இளைய மகள் ஷர்மிளா வீட்டிற்கு வந்து தங்கியிருந்தனர்.

  அறுவை சிகிச்சை செய்து ஏதாவது ஏற்பட்டால் எப்படி தனியாக வாழ்வது என கண்கலங்கி மகளிடமும் மருமகனிடம் கூறியுள்ளனர். நேற்று இரவு 10 மணிக்கு படுக்க சென்றனர்.

  இரவு சுமார் ஒரு மணி அளவில் ஷர்மிளா சென்று அம்மா, அப்பாவை பார்த்தபோது வரதராஜுலு, தனலட்சுமி விஷமருந்தி மயங்கி கிடந்தனர்.

  உடனடியாக இருவரையும் ஆட்டோவில் செய்யாறு அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதனை செய்து 2 பேரும் இறந்து விட்டதாக கூறினார்.

  இது சம்பந்தமாக ஷர்மிளாவின் கணவர் ரவி செய்யாறு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாலு வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

  இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  ஆரணி:

  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியை சேர்ந்த ராணி சகுந்தலா என்பவரின் மகள் ‌ஷர்மிளா (22) கடந்த 3ஆண்டுகளுக்கு முன்பு ஆரணி அருகே உள்ள அக்ராபாளையம் கிராமத்தை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பார்த்தீபன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு லிங்கேஸ்வரன் என்ற மகனும் (2) லிதிஷா (2) என்ற மகளும் உள்ளனர்.

  இந்நிலையில் ‌ஷர்மிளா அண்ணன் சார்லஸ் என்பவருக்கு செல்போன் மூலம் பார்த்தீபனின் உறவினர் தொடர்பு கொண்டு தங்கையை பார்க்க வருமாறு அழைத்துள்ளார்.

  இதனால் சார்லஸ் மற்றும் ‌ஷர்மிளா தாயார் ராணி சகுந்தலா ஆகியோர் அக்ராபாளையம் கிராமத்திற்கு சென்ற போது ‌ஷர்மிளா வீட்டில் பிணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

  இது சம்மந்தமாக பார்த்தீபன் மற்றும் வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டபோது சரிவர பதிலக்கவில்லை. மேலும் இது சம்மந்தமாக ராணி சகுந்தலா மற்றும் உறவினர்கள் ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு பெண்ணின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி மனு அளித்தனர்.

  இச்சம்பவம் குறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து ‌ஷர்மிளாவின் கணவர் பார்த்தீபனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
  ×