search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirunelveli Robbery"

    • கடந்த 11-ந்தேதி ரதி வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றார்.
    • பின்னர் நேற்று மாலை வீட்டிற்கு வந்தார். அப்போது அவரது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

    நெல்லை:

    நெல்லை பேட்டை திருமங்கைநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் தினேஷ்பாபு. இவர் சென்னையில் தங்கியிருந்து என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரதி (வயது34).

    கடந்த 11-ந்தேதி ரதி வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று மாலை வீட்டிற்கு வந்தார். அப்போது அவரது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 14 பவுன் தங்கநகைகள், ரூ. 20 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது. இதன் மதிப்பு ரூ. 6 லட்சம் ஆகும்.

    இது தொடர்பாக அவர் பேட்டை போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்வையிட்டனர். அப்போது வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    • பீரோவில் இருந்த ரூ.5 லட்சம் பணத்தை காணவில்லை. மேலும் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான எல்.இ.டி. டிவி உள்ளிட்ட பொருட்களும் திருட்டு போயிருந்தது.
    • அதிர்ச்சி அடைந்த சாந்தகுமாரி, நாங்குநேரி போலீசில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் செல்வி விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் செல்லையா(வயது 62). இவரது மனைவி சாந்தகுமாரி(56).

    செல்லையா தாசில்தாராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சாந்தகுமாரி மறுகால்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவியாக உள்ளார். இவருக்கு நாங்குநேரி அருகே உள்ள தென்னிமலையில் தோட்டத்துடன் கூடிய பண்ணை வீடு உள்ளது.

    நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் பண்ணை வீட்டுக்கு சென்ற செல்லையா அன்று இரவு வெகுநேரம் ஆகிவிட்டதால் அங்கேயே தங்கிவிட்டார். பின்னர் நேற்று தோட்டத்தில் இருந்து வீட்டுக்கு அனைவரும் திரும்பி உள்ளனர்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உடனே அனைவரும் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பீரோவில் இருந்த ரூ.5 லட்சம் பணத்தை காணவில்லை. மேலும் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான எல்.இ.டி. டிவி உள்ளிட்ட பொருட்களும் திருட்டு போயிருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தகுமாரி, நாங்குநேரி போலீசில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் செல்வி விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.

    இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார். அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருக்குறுங்குடி பெரியகுளத்தின் கரையில் உள்ள இசக்கிஅம்மன் கோவிலிலும் மர்மநபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளனர்.
    • மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி மேலரதவீதியில் ஸ்ரீஉச்சிமகாளி அம்மன் கோவில் உள்ளது.

    நேற்று இரவில் கோவிலுக்குள் புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். இன்று காலை அங்கு சென்ற நிர்வாகிகள் உண்டியல் உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா பிச்சையா என்ற திருநாமம் (வயது 56) திருக்குறுங்குடி போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கு பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அதில் மர்மநபர்கள் 2 பேர் காரில் வந்து இறங்கி, கோவிலுக்குள் சென்று உண்டியலை இரும்பு கம்பியால் உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற காட்சிகள் பதிவாகி உள்ளது. உண்டியலில் ரூ.10 ஆயிரம் வரை பணம் இருக்கலாம் என்று பக்தர்கள் தெரிவித்தனர்.

    தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கோவிலில் பதிந்திருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இதுபோல திருக்குறுங்குடி பெரியகுளத்தின் கரையில் உள்ள இசக்கிஅம்மன் கோவிலிலும் இதே நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளனர். இதனால் மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    பாளை அருகே ஆட்டோ டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

    நெல்லை:

    பாளை வி.எம்.சத்திரத்தை அடுத்த கிருஷ்ணாபுரம் சாந்தம் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் ராஜா சிங் (வயது 57), ஆட்டோ டிரைவர்.

    சம்பவத்தன்று ராஜாசிங் குடும்பத்துடன் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டார். நேற்று வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைந்து கிடந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த ராஜா சிங் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 3½ பவுன் தங்க நகை, 400 கிராம் வெள்ளி, விலைஉயர்ந்த பொருட்கள் ஆகியவை திருட்டு போயிருந்தது. திருட்டுப் போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ 2 லட்சம் ஆகும்

    வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    இதுகுறித்து ராஜா சிங் சிவந்திபட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகிறார்.

    ×