search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruchendur Rail"

    • எஸ்.பி. பொன்னையா நாடாரின் உருவப்படத்தை பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம் திறந்து வைத்தார்.
    • விழாவில் 100 மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

    ஆறுமுகநேரி:

    நெல்லை - திருச்செந்தூர் இடையிலான ரெயில் போக்குவரத்து தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு ஆறுமுகநேரி ரெயில்வே வளர்ச்சி குழு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடந்தன.

    படத்திறப்பு விழா

    இந்த ரெயில் வழித்தடத்தை அமைக்க கடும் முயற்சிகளை மேற்கொண்ட சாதனையாளரான ஆறுமுகநேரி மேல வீடு எஸ்.பி. பொன்னையா நாடார் படத்திறப்பு விழா ஆறுமுகநேரி மெயின் பஜார் சந்திப்பில் நடைபெற்றது. ரெயில்வே வளர்ச்சி குழு ஒருங்கிணைப்பாளர் ரா.தங்கமணி தலைமை தாங்கினார். பேரூராட்சி துணைத் தலைவர் அ.கல்யாணசுந்தரம், ரெயில்வே வளர்ச்சி குழு செயலாளர் அமிர்தராஜ், பொருளாளர் பி.எஸ்.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழா குழு அமைப்பாளர் முருகேச பாண்டியன் வரவேற்று பேசினார்.எஸ்.பி. பொன்னையா நாடாரின் உருவப்படத்தை பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம் திறந்து வைத்தார். விழாவில் திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி சுகுமார், சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அலுவலர்களான பிரகாஷ், ஒயிட் பீல்டு, காண்ட்ராக்டர்கள் கே.சிவக்குமார், எஸ்.வெற்றிவேல், ஆறுமுகநேரி அரிமா சங்க பட்டய தலைவர் எம்.எஸ்.எஸ்.சண்முக வெங்கடேசன், தலைவர் ஜே.நடராஜன், மாவட்ட தலைவர்கள் ஏ.சீனிவாசன், எஸ்.கணேசமூர்த்தி, பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் குமரன், உதயசுந்தர், மாரி தங்கம், ஆறுமுகநேரி உப்பு தொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் லட்சுமணன், பக்தஜன சபை பொருளாளர் அரிகிருஷ்ணன், சைவ வேளாளர் சங்க செயலாளர் முருகன், பா.ஜ.க மாவட்ட மகளிர் பிரிவு செயலாளர் பாப்பா, மேல வீடு கண்ணன், மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வரவேற்பு

    முன்னதாக நெல்லையிலிருந்து வந்த ரெயிலுக்கு ஆறுமுகநேரி ரெயில் நிலையத்தில் வரவேற்பு பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். பயணிகள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. நெல்லை-திருச்செந்தூர் ரெயில் போக்குவரத்து தொடங்குவதற்கு முக்கிய காரணமாக இருந்த எஸ்.பி.பொன்னையா நாடாரின் சாதனைகளை விளக்கும் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. தொடர்ந்து இந்து மற்றும் சரஸ்வதி பள்ளிகளைச் சேர்ந்த 100 மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.இதனை பொன்னையா நாடாரின் குடும்பத்தின் சார்பில் தொழிலதிபர் ராம்பிரசாத் வழங்கினார்.நிறைவாக ரெயில் நிலைய அலுவலர் பாபா ராஜ்குமார் டேவிட் முன்னிலையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியும் நடந்தது.

    இதேபோல் காயல்பட்டினம் ரெயில் நிலையத்திலும் நூற்றாண்டு விழா கொண்டாடப் பட்டது.விழா விற்கான ஏற்பாடுகளை ஆறுமுகநேரி ெரயில்வே வளர்ச்சி குழு நிர்வாகிகள், மேலவீடு ராம்பிரசாத், தொழிலதிபர் எஸ்.ஆர்.எஸ்.சுரேஷ்குமார் உள்பட பலர் செய்திருந்தனர்.

    ×