search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tigers Day"

    • அம்பாசமுத்திரம் பகுதியில் புலிகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • பள்ளி மாணவ, மாணவிகள் பதாகைகள் ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் பேரணியாக வந்தனர்.

    கல்லிடை:

    உலக புலிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29 அன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு அம்பாசமுத்திரம் பகுதியில் புலிகள் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த பேரணி நடைபெற்றது.

    அம்பை வனச்சரக அலுவலகம் முன்பு இருந்து தொடங்கிய பேரணி தாலுகா அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம் வழியாக பூக்கடை பஜாரில் திரும்பி தீர்த்தபதி மேல்நிலைப்பள்ளி, கலைக்கல்லூரி, வழியாக சென்று வனத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தை அடைந்தது, பேரணியில் வனத்துறையினர் ஒலிம்பிக் தீபம் ஏந்தி தொடர் ஓட்டமாக கொண்டு வந்து ஏற்றினர்.

    இதில் கல்லிடைக்குறிச்சி திலகர் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, அம்பாசமுத்திரம் தீர்த்தபதி மேல்நிலைப்பள்ளி, மெரிட் மேல்நிலைப்பள்ளி, வேல்ஸ் வித்யாலயா பள்ளி, கேம்ப்ரிட்ஜ் பள்ளி மாணவ, மாணவிகள், கலந்து கொண்டு புலிகளின் முக்கியத்துவம், வனப் பாதுகாப்பின் அவசியம், மரம் நடுதலின் அவசியம் பற்றிய பதாகைகள் ஏந்தியும், கோசங்கள் எழுப்பியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேரணியாக வந்தனர். மேலும் புலிகள் தினத்தை முன்னிட்டு மாணவ- மாணவிகளுக்கு வனத்துறை சார்பில் நடைபெற்ற ஓவிய போட்டியில் வரையப்பட்ட ஓவியங்கள் வன உயிரினக்காப்பாளர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. பின்னர் பயிற்சி வனச்சரகர் கிருத்திகா புலிகளின் எண்ணிக்கை அதன் குணாதியங்கள், வனப் பாதுகாப்பு விபரங்களை தெரிவித்து பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

    ×